September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நாளை மட்டக்களப்பு – அம்பாறை பக்தர்கள் இணையும் மாபெரும் புனித பாதயாத்திரை

(செல்வி வினாயகமூர்த்தி) விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு முதல் அம்பாறை வரையிலான பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் புனித பாதயாத்திரை நாளை 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்பாதயாத்திரை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. மட்டக்களப்பு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, காரைதீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து இப்புனித பாதயாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர். கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை, சேனைக்குடியிருப்பு, […]

Read More

வறட்சியால் தவிக்கும் கால்நடைகளுக்கு ஆலையடிவேம்பு பிரதேசசபை தற்காலிக குடிநீர் ஏற்பாடு.

(செல்வி வினாயக மூர்த்தி ) அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியால் கால்நடைகள் குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், அவற்றுக்கான குடிநீர் தட்டுப்பாட்டைத் தற்காலிகமாக நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை ஆலையடிவேம்பு பிரதேசசபை இன்று சனிக்கிழமை (12) முன்னெடுத்துள்ளது. ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட ஏத்தாளை குளப்பகுதியில் கால்நடைகளுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தும் வகையில், வவுசர் மூலம் குடிநீர் பெற்றுக்கொடுத்து தற்காலிக தீர்வொன்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இலங்கையின் பல […]

Read More

பாலமுனைப் பிரதான வீதியில் கோர விபத்து- குடும்பஸ்தர்   சம்பவ இடத்தில்  பரிதாப பலி

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில்  பாலமுனைப் பகுதியில் இன்று (12)    இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை – 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் சமது முபாரிஸ் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே  சம்பவ இடத்தில்  உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் […]

Read More

இன்று கன்னியா காயத்திரி பீடத்தில் எண்ணெய் காப்பு ; நாளை மஹா கும்பாபிஷேக பெருவிழா

( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா   ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, நாளை13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.05 -10.30 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இன்று 12ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. நாளை மகா கும்பாபிஷேகம் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன், சிறப்பாக இடம்பெறவுள்ளது. நுவரெலியா காயத்ரி பீட இலங்காதீஸ்வரர் ஆலய பிரதம குரு  பிரம்மஸ்ரீ […]

Read More

சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு பாடசாலை அதிபர் அருசகோதரி கோசலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பாடசாலை மாணவர்களது பேச்சு நடனம் பாடல் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேசசபை உப தவிசாளர் கு. புவனரூபன்,கல்முனை மரியதிரேசா ஆங்கில பாடசாலை அதிபர் அருசகோதரி அலண்ட், சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலைய அதிபர் அருட்சகோதரி டிலக்க்ஷி, சொறிக்கல்முனை கன்னியார்மட தலைவி அருட்சகோதரி ஜோதினி ஆகியோரும் மாணவர்களின் பெற்றோர்களும் […]

Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப் பீடத்தை அமைக்க திருக்கோவிலில் காணி உள்ளது – கோடிஸ்வரன் எம்.பி

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தை திருக்கோவில் பகுதியில் அமைக்க முடியும். அதற்கான காணிகள் அந்தப் பகுதியில் உள்ளன என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அ எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]

Read More

ஆலயத் திருவிழாக்கள்: பக்திக்கானதா? களியாட்டத்திற்கானதா?

–வி.ரி.சகாதேவராஜா– வாணவேடிக்கையும் ஆரவாரமும் அவசியமா? சிந்திக்க வேண்டிய காலம் இது! ஆலயத் திருவிழா என்றாலே நமது பாரம்பரிய வாழ்வியலில் ஒரு தனித்துவமான இடம் உண்டு. அது வெறுமனே ஒரு சமய நிகழ்வல்ல. பக்தி, பண்பாடு, சமூக ஒற்றுமை, அறப்பணி, பாரம்பரியம், உறவுகளின் ஒன்றுகூடல் எனப் பல்வேறு அம்சங்களின் சங்கமமாகவே ஆலயத் திருவிழாக்கள் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றன. ஆலயத் திருவிழாவின் அடிப்படை நோக்கம் என்ன? இறைவனை வழிபடுதல், மன அமைதியைப் பெறுதல், சமூக ஒற்றுமையை வளர்த்தல், நல்லொழுக்கத்தைப் பேணுதல், […]

Read More

பாலமுனை வாஹிட்டின் “தொலைந்து போன முகவரி” நூல் வெளியீட்டு விழா!

பாலமுனை வாஹிட்டின் “தொலைந்து போன முகவரி” நூல் வெளியீட்டு விழா! (அஹமட்) கவிஞர் பாலமுனை வாஹிட் எழுதிய “தொலைந்து போன முகவரி” கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (12) காலை 9.00 மணிக்கு பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. கலாபூசணம் பாவேந்தல் பாலமுனை பாருக் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். பாராளுமன்ற […]

Read More

சம்மாந்துறை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மாநபி (ஸல்) அவர்களின் ஜனன தின விழா கோலாகலம்.

( செய்தியாளர்- மின்மினி மின்ஹா) சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மாநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று புதன்கிழமை (09) காலை 10.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர்களான ஜனாப் எஸ். ஜுனைதீன் மற்றும் ஜனாப் எச்.எம். பரீஷ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. மாநபி முஹம்மத் (ஸல்) […]

Read More

மல்வத்தை கணபதிபுரம் விக்னேஷ்வராவில் இருவர் சித்தி 

( வி.ரி.சகாதேவராஜா)  சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருக்கிறார்கள். ஐ .திலக்ஷிதா (153) மற்றும் எம்.லோஜிதா( 142 )ஆகிய மாணவிகளே சித்தி பெற்றிருப்பதாக அதிபர் திருமதி எஸ். சந்திரமதி தெரிவித்தார்.

Read More