September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சம்மாந்துறை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மாநபி (ஸல்) அவர்களின் ஜனன தின விழா கோலாகலம்.

சம்மாந்துறை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மாநபி (ஸல்) அவர்களின் ஜனன தின விழா கோலாகலம்.

( செய்தியாளர்- மின்மினி மின்ஹா)

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மாநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று புதன்கிழமை (09) காலை 10.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர்களான ஜனாப் எஸ். ஜுனைதீன் மற்றும் ஜனாப் எச்.எம். பரீஷ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

மாநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் புகழ், சிறப்புகள், உன்னத வாழ்க்கை வரலாறு மற்றும் மனிதகுலத்திற்கான அவர்களின் போதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் ஜனாப் எச். நைரூஸ்கான் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஃப். நவாஸ் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரீ. ஜனுபர் மற்றும் வலயக் கல்விப் பணிமனையின் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் ஜனாப் ஏ.எச். நாசிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விசேட அதிதிகளாக ஸரிஆ கலா பீடத்தின் அதிபரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட ஆய்வுகூட உதவியாளருமான மெளலவி ஏ.பி. ரம்சீன் (காஷிஃபி) மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் வரலாற்று ஆய்வாளருமான தேசபந்து ஜலீல் ஜீ ஆகியோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் செயலாளர் ஜனாபா எஸ்.எம். ஆயிஷா பீவி, பொருளாளர் ஜனாப் ஆர்.எம். ஆஷிர் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


மேலும், பாடசாலை ஆசிரியர்களான ஜனாப் எஸ்.எம். அனஸ், ஜனாபா எஸ்.ஆர்.கே. ஜெளஷி, ஜனாபா யூ. சித்தி பாத்தும்மா, ஜனாபா எம்.எல். வாஹிதா, ஜனாபா எம்.எல். ரைஸா பர்வீன், ஜனாபா எம்.ஐ. சித்தி சகீலா மற்றும் ஜனாபா ஏ.எம். சநூபா ஆகியோரும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜனாப் எச்.எம். அஷாம், ஜனாபா ஷகிலா பேகம் மற்றும் ஜனாபா எம்.ஏ.எப். ஹபீஸா ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.


நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்தில் தோட்டம் தொடர்பான விசேட செயற்பாடொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
முழு நிகழ்வுகளையும் சிரேஷ்ட ஒலி–ஒலிபரப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜனாப் ஷீ.எம்.யூ. தாரிக் சிறப்பாக நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *