September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!

சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!

(செல்வி வினாயகமூர்த்தி)

​சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவும் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயமும் இணைந்து நடத்திய சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், மாணவர்களின் வீதி நாடக நிகழ்வுகளும் இன்று (08)செவ்வாய்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றன.

​இவ்வாண்டு சர்வதேச எழுத்தறிவு நாளானது “மக்கள், பூமி மற்றும் செழிப்பிற்கான எழுத்தறிவு” (Literacy for People, Planet and Prosperity) எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

​இவ்வூர்வலத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திரு. ஏ. நசீர் மற்றும் திரு. எஸ். சுரனுதன், முன்பள்ளி பாடசாலைகளுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. எஸ். விவேகானந்தராஜா, வணிகக்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. கே. பிரபாகரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணியானது திருக்கோவில் கல்வி வலய முன்றலில் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன். மீண்டும் பாடசாலையில் முடிவுறுத்தப்பட்டது. ​பேரணியின் போது மாணவர்கள் கல்வி மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றதுடன் மாணவர்களினால் கல்வியின் அவசியத்தை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு வீதி நாடகங்களும் அரங்கேற்றப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

​இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி வலய உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *