சம்மாந்துறை வலயத்தில் CLEAN SRI LANKA NEXT GEN – 2ஆம் கட்ட பசுமையான பாடசாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!
க.டினேஸ்
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், CLEAN SRI LANKA NEXT GEN திட்டத்தின் 2ஆம் கட்ட பசுமையான பாடசாலை நிகழ்வு, அல் மர்ஜான் தேசிய பாடசாலையில் வலயக் கல்விப் பணிப்பாளர் S. Mahedrakumar அவர்களின் தலைமையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதான வளவாளராக AMM. Riyas (M.Phil), சிரேஷ்ட விரிவுரையாளர்,துறைத் தலைவர் ) கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமையான எதிர்காலம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான பயனுள்ள விளக்கங்களையும் விழிப்புணர்வுக் கருத்துகளையும் வழங்கினார்.
அத்துடன், சம்மாந்துறை அமானா வங்கியின் முகாமையாளர் Mohamed Nusail (LLB) அவர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார்.
மேலும், சம்மாந்துறை CLEAN SRI LANKA இணைப்பாளர் நபாஸ் அவர்களும் கலந்து கொண்டு, பசுமையான சூழலை உருவாக்குவதில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து அழகிய கருத்துரையை வழங்கினார்.
இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, CYCLING GREEN அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோரால் பாடசாலைகளுக்கு பெறுமதிமிக்க புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இது மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தையும் அறிவுத் தேடலையும் ஊக்குவிக்கும் பயனுள்ள செயற்பாடாக அமைந்தது.
நிகழ்வின் அனைத்து அம்சங்களையும் Major Nazir ISA அவர்கள் சிறப்பாக நெறிப்படுத்தி வழிநடத்தினார்.
பசுமையான சூழல் என்பது நமது எதிர்காலத் தலைமுறைக்காக நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்தாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதை மாணவர்களிடையே விதைக்கும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் காலத்தின் அவசியமாகும்.
இளைய தலைமுறையினரின் சிந்தனைகளில் பசுமை உணர்வையும், செயல்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் விதைத்து, தூய்மையானதும் வளமானதுமான இலங்கையை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு சிறப்பானதொரு முன்னெடுப்பாக அமைந்தது.
பசுமையைப் பாதுகாப்போம்! தூய்மையான இலங்கையை உருவாக்குவோம்!






