இலங்கையில் கல்முனை ஆதார வைத்தியசாலை இரண்டாம் இடம்; தேசிய உற்பத்தித்திறன் போட்டி விருதை வென்றது !
( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய உற்பத்தித்திறன் 2025/2026 போட்டியில் தேசிய ரீதியாக தங்க விருது, 1ம், 2ம், மற்றும் 3ம் இடங்களை பெற்றுக்கொண்ட அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் நேற்று (08.11.2026) தீபாவளியன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுத்துறையில் தேசிய ரீதியில் 2ம் இடத்தினை கல்முனை ஆதார வைத்தியசாலை பெற்றுக்கொண்டமைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
வைத்தியசாலை முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் மருத்துவர் எஸ்.ராகுலன், கணக்காளர் நஷிமுல் ஹக்,தாதிய உத்தியோகத்தர்களான என்.சசிதரன்( பரிபாலகர்), எஸ்.ஜெயசாந்தி, டி.டில்ருக்ஷி, நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள் ஆகியோர் இவ் விருதை பெற்றுக் கொண்டனர்.







