November 9, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > கோட்டாபய ராஜபக்ஷவிடம் மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB ) வாக்குமூலம் பதிவு!

கோட்டாபய ராஜபக்ஷவிடம் மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB ) வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CCIB முன்னிலையாகியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, ஒரே நேரத்தில் இரண்டு அரசாங்க நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசாங்க நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த விசாரணைகளுக்கமையவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *