November 9, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அக்கரைப்பற்று சமூகப் பொலிஸ் ஆலோசனைக் குழு கௌரவிப்பு

இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அக்கரைப்பற்று சமூகப் பொலிஸ் ஆலோசனைக் குழு கௌரவிப்பு

(செல்வி வினாயகமூர்த்தி)

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி D.M. சுனில் ரத்னாயக்க இடமாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு, அவரது சேவையைப் பாராட்டி அக்கரைப்பற்று சமூகப் பொலிஸ் பிரிவின் ஆலோசனைக் குழுவினரால் இன்று (08) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆலோசனைக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கைப் பேணுவதிலும், பொதுமக்களுடனான சுமுகமான உறவைப் பேணிப் பொலிஸ் சேவையை முன்னெடுப்பதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டிய ஆலோசனைக் குழுவினர், அவரது சேவைக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். அத்துடன், அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆறுமுகம் அசோகா, வைத்தியர் சித்திரா தேவராஜன், MSM. இக்ராம் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர், மற்றும் செல்வி வினாயகமூர்த்தி ஊடகவியலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *