November 9, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கதிரியக்கவியலாளர்(Radiographer) பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கதிரியக்கவியலாளர்(Radiographer) பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மேற்படி 2026.01.16 அன்று பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கதிரியக்கவியளாளர் எனும் பதவிநிலைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்து இருந்த நிலையில் கதிரியவியலாளர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான வர்த்தமானியின் 30.10.2026 இவ் வருடத்தில் புதிதாக பௌதிகவியல் பாடத்தில் திறமை சித்தி கோரப்பட்ட நிலையில் சாதாரண சித்தியுடன் குறித்த பட்டபடிப்பினை நிறைவு செய்த பட்டதாரிகள் இக் கோரிக்கையினால் குறித்த பதவி நிலைக்கு உள்வாங்கப்படுவதில் பாதிக்கப்பட்டுள்ளனர்இதனால் இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரைகளான 12,மற்றும் 14 மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இன்று இந்த முறைப்பாடு சட்டத்தரணி அ.நிதான்சன் மற்றும் டலிமா ஹலிஸ்ரா ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் அடிப்படையில் இன்று இலங்கை மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

எவையேனும் தொழில் தகமைக்கு ஏதேனும் விசேட தகுதிகளை கோருகின்றபோது அது ஒரு அடிப்படை உரிமை மீறலாக அமையக்கூடாது என பல்வேறுபட்ட தீர்க்கப்பட்ட வழக்குகள் இலங்கையில் உள்ள நிலையில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள் வேண்டும் என தற்போது கோருவது பொருத்தமற்றது க.பொ.த உயர் தரத்தில் சாதாரண சித்தி பெற்று இன்று பல்கலைக்கழகத்தில் இம் மாணவர்கள் உயர்தரத்தில் திறமைச் சித்தி பெற்ற மாணவர்களை விட அதிக புள்ளி பட்டபடிப்பில் பெற்றுள்ள நிலையில் பதவிக்கான உள்ளீர்ப்பில் திடீரென மாற்ற ஒன்றினை உள் வாங்கியமையானது அவர்களின் பட்டத்துக்கான தகுதியை இழக்க செய்துள்ளது.இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில் எடுத்துகாட்டப்பட்டுள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *