November 9, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி – கார்மேல் பற்றிமா கல்லூரி மீண்டும் சாதனை!

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி – கார்மேல் பற்றிமா கல்லூரி மீண்டும் சாதனை!

12 பாடசாலைகளுடன் போட்டியிட்டு இரண்டாம் இடம் – வெள்ளிப் பதக்கம் வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள்!

கிழக்கு மாகாண பாடசாலைக்கு இடையிலான குழுநிலை சதுரங்கப் போட்டியில், கார்மேல் ப்ற்றிமா பாடசாலையின் மாணவ மாணவிகள் பங்குபற்றி தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன், சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளனர்.

அந்தவகையில் 04 பிரிவுகளில் 07 அணிகள் ( 47 மாணவர்கள் ) பங்குபற்றி, அவ் 07 அணிகளுமே வெற்றி பெற்றுள்ளன. ( 1st Runner up – 04, Merit – 03, Board Champion – 08 )

மாணவ மாணவிகளை பாடசாலையின் சார்பில் மாகாண மட்ட போட்டிக்கு செல்வதற்கு அனுமதி தந்த பாடசாலையின் அதிபர் Fr. Lebourn OMI அவர்களுக்கும், பாடசாலை சார்பாக மாணவர்களுடன் வருகைதந்த Mrs.Sinthuja Kandeepan Teacher அவர்களுக்கும்

போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, அவர்களை போட்டிக்காக தயார்படுத்தி, மாணவர்களுடன் வருகைதந்த பயிற்றுவிப்பாளர்களான Mr. Sakeer ஆசிரியர் மற்றும் Mr. Sundhan ஆசிரியர்

அத்துடன் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *