October 1, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > Flydubai விமானத்தில் திடீர் அவசரக் குறியீடு: சவூதியில் தரையிறக்கம்

Flydubai விமானத்தில் திடீர் அவசரக் குறியீடு: சவூதியில் தரையிறக்கம்

துபாயிலிருந்து 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் புறப்பட்ட Flydubai (FZ1073) விமானத்தில், நடுவானில் திடீரென விமானக் கடத்தலைக் குறிக்கும் அவசரக் குறியீடான ‘Squawk 7500’ செயல்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சவூதி அரேபிய வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இந்த அவசரச் சிக்னல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலிய வான்படையின் போர் விமானங்கள் விரைந்து செயல்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து Flydubai விமானம் தனது பயணப் பாதையை மாற்றி, மீண்டும் சவூதி அரேபிய வான்வெளிக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசரப் பாதுகாப்பு ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், விமானம் உண்மையில் கடத்தப்பட்டதா அல்லது வேறு காரணத்தால் ‘Squawk 7500’ அவசரக் குறியீடு செயல்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, விமானத்தின் உள்ளே இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் சவூதி அரேபியா நோக்கி திருப்பி விடப்பட்டதாக CNN செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *