ஏர்பஸ் விவகாரத்துடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது, 500,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
அதேவேளை, நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சாட்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்பது பிணை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில், ஒன்றில் மாத்திரமே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.