September 25, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நேற்று பாண்டிருப்பில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற வனவாசம்;சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு 

நேற்று பாண்டிருப்பில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற வனவாசம்;சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு 

படங்கள் – (வி.ரி.சகாதேவராஜா- Sanjeevanviews)

வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய உற்சவத்தின் வனவாசம் நிகழ்வு நேற்று  (23) புதன்கிழமை மாலை பக்திபூர்வமாக நடைபெற்றது.

 சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் குளக்கட்டு வயல் பிரதேசம் எல்லாம் நடந்து இந்த வனவாசத்தை நிறைவு செய்வது பக்தர்களின் வழக்கமான செயற்பாடாகும்.

ஆலயத்தில் விசேட பூஜையுடன் பஞ்ச பாண்டவர்கள் ஐவர் சகிதம் பிற்பகல் 3.30 மணியளவில் புறப்பட்ட வனவாச நிகழ்வு முதலாவது வாள் மாற்றும் சந்தியில் வாள் மாற்றியதுடன் தொடர்ந்தது.

 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் காவடிகள் புடைசூழ ஐவர் கொலு நேரடியாக நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.

அங்கிருந்து குளக்கட்டு வழியாக சேனைக்குடியிருப்பு காளியம்மன் ஆலயத்தை சென்றடைந்து மீண்டும் வயல் கட்டு வழியாக ஆலயத்தை இரவு 7. 30 மணியளவில் வந்தடைந்தது.

 அதேவேளை பாரம்பரிய  தவநிலை நிகழ்வு இன்று 24ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இடம்பெறுகிறது.

நாளை25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீமிதிப்பு பிரதான சடங்கு இடம்பெறும்.

நாளை மறுநாள் 26ஆம் திகதி பாற்பள்ளயம்  நிகழ்வு இடம்பெறும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *