September 25, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியாவும், றியாசாவும் SLEAS-1 தரத்திற்கு தரமுயர்வு

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியாவும், றியாசாவும் SLEAS-1 தரத்திற்கு தரமுயர்வு

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றி வரும் என். வரணியா சாந்தரூபன் மற்றும் எம்.எச். றியாஸா ஆகியோர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

கல்வி நிர்வாகத் துறையில் தமது திறமை, அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி வரும் இருவருக்கும் கிடைத்துள்ள இத்தரமுயர்வு, அவர்களின் நீண்டகால சேவைக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

கல்முனை கல்வி வலயத்தின் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதில் இருவரும் முக்கிய பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தமது நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கல்வி நிர்வாக சேவையில் முதலாம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கல்வித் துறையில் அவர்களது அனுபவமும் நிர்வாகத் திறனும் மேலும் சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டு, கல்முனை கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்துக்கும், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் தொடர்ந்தும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *