September 25, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிபான் பதவியேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிபான் பதவியேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) உறுப்பினர் ஹபீப் ரிபான் இன்று (24) புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த எம்.எஸ். அப்துல் வாஹித் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமானது.

இதனையடுத்து, ஏற்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஹபீப் ரிபான் நியமிக்கப்பட்டு, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *