September 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜனுக்கு கருணை காட்டுமாறு முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரசிடம் வேண்டுகோள்

அனோஜனுக்கு கருணை காட்டுமாறு முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரசிடம் வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் 5 முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய ஆட்சியார்களிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA), தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (TMA), ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) மற்றும் தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (SAWM) ஆகிய ஊடக அமைப்புகள் இணைந்து நேற்று (22) வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த அவசரக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *