September 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வெருகலம்பதி ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்: 12-ஆம் நாள் திருவிழா !

வெருகலம்பதி ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்: 12-ஆம் நாள் திருவிழா !

வெருகலம் பதியிலிருந்து.
சௌவியதாசன்

​வெருகலம்பதி. அருள்மிகு ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா தற்போது மிக விமர்சையாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்று வருகின்றது.


​கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி (12-09-2026) கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ளது. பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கும், பஞ்சவாத்தியங்களுக்கும் மத்தியில் சிறப்பு வழிபாடுகளுடன் திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.


​12-ஆம் நாள் திருவிழா மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள்
நேற்று நடைபெற்ற 12-ஆம் நாள் திருவிழா, மல்லிகை தீவு கிராம மக்களின் உபயத்துடனும், முழுமையான பங்களிப்புடனும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.


​தொடர்ந்து, மல்லிகை தீவு கிராமமக்களின் அனுசரணையுடன் பக்திப் பரவசமூட்டும் கலை கலாச்சார நிகழ்வுகளும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில் திரளான அடியார்கள் கலந்துகொண்டு எம்பெருமான் வேலாயுத சுவாமியின் அருளைப் பெற்றுச் சென்றனர்

.
​எதிர்வரும் நிகழ்வுகள் தீர்த்தோற்சவம் தொடர்ந்து வரும் நாட்களில் பல்வேறு உபயகாரர்களின் அனுசரணையுடன் திருவிழா நிகழ்வுகள், சப்பரம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறவுள்ளன. இத்திருவிழா பெருவிழாவின் தீர்த்தோற்சவம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி (30-09-2026) அன்று தீர்த்தக் கேணியில்/ சிறப்பாக நடைபெற்று, அன்றைய தினத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *