November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 01 இற்கு ஜெயந்திமாலா பதவி உயர்வு.

 செல்லையா பேரின்பராசா . அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 01 இற்கு 16.06.2026 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் பதவி உயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயம் , மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசியப் பாடசாலை என்பவற்றின் பழைய மாணவியான இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரியாவார். 20.12.2013 இல் உயிரியல் […]

Read More

கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ஆளுநர் திறந்து வைத்தார்

​ நா.பவதாகர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் பங்கேற்பில், கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (28) பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ. அதம்பாவாவும், சிறப்பு அதிதிகளாகக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், […]

Read More

கொக்கட்டிச்சோலையில் திருமூலர் திருமந்திரம் 3000 பாடல்கள் முற்றோதல் நிறைவு

(வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய திருமந்திர அரண்மனையில், சைவத்திருமுறைகளின் பத்தாம் திருமுறையான திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 பாடல்கள் முற்றோதல் நிகழ்வு நேற்று முன்தினம் (26.10.2026) திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நிறைவு பெற்றது. கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த புனித நிகழ்வு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன்போது திருமந்திரத்தின் ஒன்பது தந்திரங்களிலும் உள்ள 3000 பாடல்களும் ஓதுவார்களால் பக்திப் பரவசத்துடன் ஓதப்பட்டன. திருமந்திர முற்றோதல் நிறைவையொட்டி, திருமந்திர அரண்மனையின் ஸ்தாபகர் சிவஸ்ரீ […]

Read More

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய எட்டாம் சடங்கு!

-பியந்த- நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய எட்டாம் சடங்கு நேற்று நடைபெற்றது. வருடாந்த உற்சவம் கடந்த 11 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 20 ஆம் திகதி நிறைவுபெற்றது.

Read More

கல்முனை உவெஸ்லியில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் திறந்து வைத்தார்!

செல்லையா பேரின்பராசா கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (28.10.2026) புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்.கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர நாடாவை வெட்டி இக் கட்டிடத்தினை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கௌரவ அதிதியாகவும், கல்முனை வலயக் […]

Read More

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் நாவிதன்வெளி பிரதேச சபைக்குப் பாராட்டு சான்றிதழ் 

( வி.ரி. சகாதேவராஜா) தேசிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025/2026 இல் பங்கேற்ற நாவிதன்வெளி பிரதேச சபைக்கு பாராட்டு (Commendation) கிடைக்கப் பெற்றுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ஐ. ரூபசாந்தன் , செயலாளர் பா. சதீஸ்கரன் ஆகியோர் அப்பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டனர். பொதுமக்களுக்குத் தரமான, வினைத்திறனான மற்றும் விளைதிறன் மிக்க சேவைகளை வழங்குதல், நிறுவனத்தின் நிர்வாகச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்துதல், […]

Read More

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் கோலாகலமாக நடைபெற்ற மீலாதுன் நபி விழா

பாறுக் ஷிஹான் ஈகைத் திருநாளாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இயங்கிவரும் முஹம்மதிய்யா ஹிப்ழு மற்றும் குர்ஆன் பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழாவும் ‘அறிவுக் களஞ்சியம்’ போட்டியும்   மிகச் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளையும், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் (சீறா) இளம் தலைமுறை மாணவர்களிடையே ஆழமாகப் பதிக்கும் நோக்கிலும், […]

Read More

நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (28) கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் […]

Read More

கல்முனை உவெஸ்லியிலும், விவேகானந்தாவிலும் இன்று கிழக்கு ஆளுநர் புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார்

நா.பவதாகர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் பங்கேற்பில், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும், விவேகானந்த தமிழ் வித்தியாலயத்திலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்கள் திறப்பு விழா இன்று (28) நடைபெறவுள்ளது. கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அதம்பாவாவும், சிறப்பு அதிதிகளாகக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர். ஹசந்தி மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் ஆகியோரும் கலந்து […]

Read More

கண்ணகிபுரம் விநாயகர் அறநெறிப் பாடசாலையில் கலைமகள் விழா சிறப்புற நடைபெற்றது!

பா.மேனன் களுவாஞ்சிக்குடி கண்ணகிபுரம் விநாயகர் அறநெறிப் பாடசாலையில் சரஸ்வதி பூஜை நிகழ்வுகள் கடந்த 18.10.2026 அன்று மிகச் சிறப்பான முறையில் பக்திப் பெருக்குடன் நடத்தப்பட்டன. இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையை அறநெறிப் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் இணைந்து வழங்கி மாணவர்களை மகிழ்வித்து மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர். விழாத் தொடக்கத்தில் கலைமகளின் பெருமையைப் போற்றும் “ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை” என்ற சரஸ்வதி துதிப்பாடல் உணர்வுபூர்வமாகப் பாடப்பட்டது. இவ்விழாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் […]

Read More