November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

நான்காம் கொளனி புனித சின்னமடுமாதா ஆலய வருடாந்தத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது!

செய்தியாளர்: க. டினேஸ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேசத்தின் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான நான்காம் கொளனியில் அமைந்துள்ள புனித சின்னமடுமாதா ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று (25.10.2026) ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது. திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், காலை 6.00 மணிக்கு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்திலிருந்து இறைமக்கள் இணைந்து புனித சின்னமடுமாதா ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காலை 8.00 மணிக்கு புனித சின்னமடுமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை ஜுனோ சுலக்சன் அடிகளாரின் தலைமையில் திருவிழாத் […]

Read More

நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை …கல்வி அமைச்சு அறிவிப்பு

நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்!…கல்வி அமைச்சு அறிவிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாளை (ஒக்டோபர் 27) ஒரு நாளுக்கு மாத்திரம் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்பு:- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் மாணவர்களும் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொண்டு, பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு […]

Read More

ஞானசார தேரருக்கான போராட்டம் இடைநிறுத்தம்

கலபொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக. உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். இன்று (25) மாலை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுடன் இணைந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை அறிவித்தார். பௌத்தத்தின் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், ஞானசார தேரரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து தலையிட்டு செயற்படுவதாக எழுத்துமூலமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், குறித்த நடவடிக்கைகள் […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஜப்பசி மாத பௌர்ணமி கலை விழா சிறப்பாக நடைபெற்றது!

-பவதாகர்- ​கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் , கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் ‘ஐப்பசி மாத பௌர்ணமி கலைவிழா’ இன்று 2026.10.25 (ஞாயிற்றுக்கிழமை) சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. தி.ஜே. அதிசயராஜ் அவர்களின் வழிநடத்தலில் சிறகப்பாக நடைபெற்றது. ​விழாவின் கணேச மகா வித்தியாலய மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. ​காவடி நடனம்: ஸ்ரீ நர்த்தனாலயா கலை மன்றம் (பாண்டிருப்பு)​கிராமிய நடனம்: லாஷ்யா ருத்ராலயா நடனப்பள்ளி (சேனைக்குடியிருப்பு)​குழு […]

Read More

மட்டக்களப்பின் புலமைத்துவ ஊற்றுக் கண்கள்- மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தொடர் நிகழ்வு ஆரம்பம்!

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க புலமைத்துவ  குழுவின் “மட்டக்களப்பின் புலமைத் துவ ஊற்றுக் கண்கள் “, பேசப்படாத பக்கங்கள் தொடர் – 1 நிகழ்வானது முதல் முறையாக மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி  தலைமையில் 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தலைவரின் காரியாலய  அவைக்கூடத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் “பண்டிதர்.ச. பூபாலபிள்ளை” (1856- 1921) அவர்களைப்பற்றி மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் காப்பாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தருமாகிய பேராசிரியர் சி .மௌனகுரு சிறப்புரை நிகழ்த்தினார்.   மட்டக்களப்புத்தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் […]

Read More

சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா: T Shirt-சேர்ட் அறிமுகம்

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, வைர விழாவுக்கான T Shirt அறிமுக நிகழ்வு நேற்று (24) சனிக்கிழமை பாடசாலை அதிபர் யு.எல்.எம். இஸ்மாயில் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 1966ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான ஆறு தசாப்தகாலக் கல்விப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், “60 வருட கால சிறப்புமிக்க கல்விச் சேவை” என்ற மகுட வாசகத்துடன் பாடசாலையின் வைர விழாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. […]

Read More

மருதமுனையில் தேசிய சமூக வலுவூட்டல் விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம்’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, மருதமுனை 1 மற்றும் 2 ஆம் பிரிவுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்காக அண்மையில் (22) மருதமுனை சமுர்த்தி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ. அன்வர் கலந்துகொண்டு, தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் அதனால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விரிவான விழிப்பூட்டல் உரையினை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் சமுர்த்தித் திட்ட முகாமையாளர் எஸ்.எல். […]

Read More

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்குபேரின்பராசா ரேகாசலன் தெரிவு.

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள எருவில் கண்ணகி மகாவித்தியாலய அதிபராகப் பணியாற்றும் பேரின்பராசா ரேகாசலன் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த(OPEN) போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றில் சித்தியடைந்து, இச் சேவைக்குத் தெரிவாகியுள்ளார்.  துறைநீலாவணைக் கிராமத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஓய்வுநிலை அதிபருமான பேரின்பராசா மற்றும் குமுதினி தம்பதியினரின் மூத்த புதல்வராவார். துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் பாடசாலைப் பருவத்திலேயே தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று […]

Read More

கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் தீபாவளிச்சிறப்பு வில்லுப்பாட்டுக்கான கலந்துரையாடல் 

(  வி.ரி.சகாதேவராஜா) தீபாவளி சிறப்பை கொண்டாடுமுகமாக,  கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் வில்லுப்பாட்டு ஒன்றை நடத்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. குறித்த கலந்துரையாடல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமையகத்தில்,  வலையமைப்பின் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நேற்று  (24) சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஒருங்கிணைப்பு மைய செயலாளர் கா. சாந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்த,  திட்ட இணைப்பாளர் பி.சந்திரமோகன் திட்டம் பற்றி விளக்கினார் . தொடர்ந்து பிரபல எழுத்தாளர்களான கலாபூஷணம் அக்கரைப் பாக்கியன், கலாபூஷணம் டேவிட் ஆகியோர் […]

Read More

திருமதி தர்ஷினி தினேஷ் காந்த் (SLTES – OPEN) தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம்

சர்மிலன் நாவிதன்வெளி (VC) கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் சித்ரா தம்பதியினரின் புதல்வியாகிய திருமதி தர்ஷினி தினேஷ் காந்த் அவர்கள், இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, (SLTES – OPEN) தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ளார். தற்போது நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், அதே பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார். தாம் கல்வி கற்ற பாடசாலையிலேயே ஆசிரியராகப் பணியாற்றி, இன்று கல்வித்துறையில் மேலும் உயரிய பொறுப்பினை […]

Read More