November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

கல்முனையை சேர்ந்த சட்டத்தரணி துவாரகா புண்ணியநாதன் ஆங்கில மொழிக்கான பிரசித்த நொத்தாரிசாக நியமனம்!

-பவதாகர்- கல்முனையை சேர்ந்த சட்டத்தரணி துவாரகா புண்ணியநாதன் ஆங்கில மொழிக்கான பிரசித்த நொத்தாரிசாக நியமனம் பெற்றுள்ளார் சட்டத்தரணி துவாரகா புண்ணியநாதன். கடந்த மூன்று வருடங்களாக சட்டத்தரணியாகவும், கடந்த ஒரு வருடமாகத் தமிழ் மொழிக்கான பிரசித்த நொத்தாரிசாகவும் பணியாற்றி வருகின்றார் இன்று (27.10.2026), ஆங்கில மொழிக்கான பிரசித்த நொத்தாரிசாக நியமனம் பெற்று, கல்முனை மேல் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

Read More

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை நெற்றால் நூலகங்களுக்கு  நூல்கள் அன்பளிப்பு 

( வி.ரி. சகாதேவராஜா) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை நெற் ஊடக வலையமைப்பு  ஒரு தொகுதி பெறுமதியான நூல்களை பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு வழங்கி வருகின்றது. கிழக்கில் புகழ் பூத்த மூத்த எழுத்தாளர் மறைந்த  பிரபல எழுத்தாளர் முகில்வண்ணன்( பாண்டிருப்பு வே.சண்முகநாதன்- எலக்ரோன்)  எழுதிய 18 நூல்கள் அடங்கிய நூல் தொகுதி  இந்த நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகம், நாவிதன்வெளி பிரதேச சபை பொதுநூலகம், அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு மையம், […]

Read More

நாளை (28) மட்டக்களப்பில் கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா 

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா – 2026 , நாளை(28) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  என் . மணிவண்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,   பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர்  பேராசிரியர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர கலந்து கொள்ளவுள்ளார். விசேட அதிதிகளாக […]

Read More

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து    நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்- லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்    நவம்பர் 10 திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி இன்று  செவ்வாய்க்கிழமை (27) காணொளி ஊடாக உத்தரவிட்டார். 2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ் […]

Read More

அனோஜனை சவூதி சிறைச்சாலையில் மீண்டும் சந்தித்தார் இலங்கைத் தூதுவர்

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவுதி உச்ச நீதிமன்றத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வழக்கை மீள விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு முன்னதாக, அனோஜன் சிவராசாவுக்கு வழங்கப்பட வேண்டிய தூதரக மற்றும் சட்ட உதவிகள் குறித்து இச்சந்திப்பின்போது […]

Read More

மட்டு செட்டிபாளையத்தில் வீடு ஒன்றில் இருந்து 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் 3 உடன் ஒருவர் கைது-

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்குவலை வைத்திருந்த  ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (25) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்புக்கு மீனவர்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு வழங்கியதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை செட்டிபாளையம் […]

Read More

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராக  தங்கராசா சினோஜன்

பா. மேனன் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம் மற்றும் களுதாவளை மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான தங்கராசா சினோஜன், இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் உயிரிச் சக்தித் துறையின் (Bioenergy) உதவி விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தனது ஆரம்பக் கல்வியை (தரம் 1 முதல் 11 வரை) மகிழூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் கற்ற இவர், பின்னர் உயர்தரக் கல்வியை (A/L) களுதாவளை மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் (Technology Stream) பயின்றார். உயர்தரப் பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்று இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான இவர், அங்கு உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில், உயிரிச் சக்தித் துறையைச் (Bioenergy) சிறப்புத் துறையாகக் கற்று இளமாணிப் பட்டத்தைப் (Bachelor of Biosystems Technology in Bioenergy) பெற்றுக்கொண்டார். தற்போது தனது திறமையினாலும், அர்ப்பணிப்பினாலும், தனித்துவமான தனது ஆளுமையினாலும் தான் பயின்ற சபரகமுவ பல்கலைக்கழகத்திலேயே உயிரிச் சக்தித் துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, கிராமத்திற்கும் தான் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Read More

யாழ்.பல்கலைக்கழகம்,  ராமகிருஷ்ண மிஷனுக்கு ‘சிவநிதி விருது’ வழங்கிக் கௌரவிப்பு

  ( வி.ரி.சகாதேவராஜா) ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு, நூறாண்டு காலமாக மனிதகுல மேம்பாட்டிற்கும் இந்து சமய, கலாசார வளர்ச்சிக்கும் ஆற்றிவரும் மகத்தான சேவைகளைப் பாராட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், தனது உயரிய விருதான ‘சிவநிதி விருதினை’  இன்று (26.10.2026 )திங்கட் கிழமை  வழங்கிக் கௌரவித்தது. இவ்விருதினை ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு சார்பாக அதன் பொதுமுகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர ஜீ மஹராஜ்  கலந்துகொண்டு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெருந்திரளான […]

Read More

மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி -செளவியதாசன் ) அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26) திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் தலைமையில் நடைபெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், அறநெறிப் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் […]

Read More

அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் நடுப்பகுதியில் நிலவிய ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது “அர்னாப்” புயலாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (26.10.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி, இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஸ்ரீ விஜயபுரம் (போர்ட் பிளேர்) நகருக்கு […]

Read More