November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

களுவாஞ்சிக்குடியில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்-பிரபு எம்.பி. பங்கேற்பு. 

( வி.ரி.சகாதேவராஜா)       பிரஜாசக்தி” தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதாரத் திட்டங்களுக்கென தெரிவுசெய்யப்பட்ட களுவாஞ்சிக்குடி பிரதேச பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும்  முதற்கட்ட நிகழ்வானது பிரதேச செயலாளர்  உ. உதயஶ்ரீதர்  தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வாழ்வாதார […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

அஸ்வெசும முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவு தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபையால் வெளியிட்டுள்ள முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவுப் பட்டியல் முழுமையாக கணனிமயப்படுத்தப்பட்ட முறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இத்தெரிவு முறையில் கிராம உத்தியோகத்தருக்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. மேலும், இதில் தெரிவு செய்யப்படாதவர்கள் மேல்முறையீடு செய்வதும் பொருத்தமற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள போது அது தொடர்பாக ஆட்சேபனை செய்வதும் குறித்த நிகழ்நிலை (Online) முறைமை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை விடுத்து […]

Read More

நாளை கல்முனை  ஆதார வைத்தியசாலையில்,தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கான சாதனையாளர்  பாராட்டு விழா

(வி.ரி.சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறை பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சாதனையை பாராட்டிக் கௌரவிக்கும் விழா,  வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் நாளை (03) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர், சகல ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக் குழு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]

Read More

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை:

பெரிய நீலாவணை அருள்மிகு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானின் ஆலயத்தில், பாலமுருகன் சமேத வள்ளி தெய்வானை திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்  சிறப்பு வழிபாடுகள் 01/11/2016  நேற்று இடம்பெற்றது. ஆலயத் தலைவர் திரு. ச. குமுதன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலய பரிபாலன சபையினர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை ஆகிய திருவுருவச் சிலைகளுக்கு ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் தலைமையில், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து பன்னீர் அபிஷேகத்தை மிகச் சிறப்பாகச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கு விசேஷ கிரியைகளும், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

மருதமுனை மசூர் மௌலானா வீதி சீரமைப்பு- மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு   பாராட்டு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா வீதியில் வடிகான்கள் மண்ணினால் நிரம்பிக் காணப்பட்டதன் காரணமாக, பெய்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில், தகவல் கிடைத்த உடனடியாகக் களத்திற்கு வருகை தந்து உரிய நடவடிக்கை எடுத்த மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் பிரதேச மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். மசூர் மௌலானா வீதியின் வடிகான்கள் மண் அடைபட்டுப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையால், மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாய நிலை […]

Read More

வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் காலிறுதி போட்டிக்கு தெரிவு.

வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் காலிறுதி போட்டிக்கு தெரிவு. கே.எஸ்.கிலசன் சக்தி தொலைக்காட்சியின் “சொல்லால் வெல்வோம் வெல்லும் வரை சொல்வோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வரும் விவாதச்சமரில் நாவிதன்வெளி வேப்பையடி கமு/சது கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் சிறப்பான வாதத்திறமையால் வெற்றி பெற்று செங்கோலை பெற்றுக்கொண்டு காலிறுதி சுற்றுக்கு தெரிவாகினர். படுவான்கரை மண்ணில் பல திறமையாளர்கள் சிறந்த தமிழ் உச்சரிப்பு, சொல்வளம், பேச்சாற்றலோடு இலைமறை காய்களாக ஒளிந்துள்ளார்கள் என்பதற்கு இவர்கள் சான்று. முதல் இரண்டு சுற்றுக்களிலும் சிறப்பான […]

Read More

காணவில்லை :தகவல் அறிந்தால் உடன் தொடர்பு கொள்ளவும்;0776545471

மட்டக்களப்பு உப்போடை கல்லடியில் வசித்துவரும் தேவகுமாரன் லக்ஷனியா எனும் 19 வயது யுவதி மட்டக்களப்பு தனியார் கற்கை நிலையத்துக்கு சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 26 ஆம் திகதி முதல் இவரை காணவில்லை எனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறித்த யுவதியின் தந்தை தெரிவித்தார்.பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் தொடர்பாக விபரங்கள் அறிந்தால் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.0776545471

Read More

அட்டாளைச்சேனை கோணாவத்தை மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு: ஆதம்பாவா எம்.பிக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை கோணாவத்தை RDS வீதியினை 29 மில்லியன் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (31) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இன்றைய ஆரம்ப நிகழ்வில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மிர், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், தேசிய மக்கள் சக்தியின் […]

Read More

திருக்கோவிலில் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ கவிதை நாடகம் அரங்கேற்றம்!

J.K.ஜதுர்ஷன் மாகாண மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடகம் மேடையேற்றம் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மகாவித்தியாலயத்தின் பாடசாலையின் ஆங்கிலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியப் படைப்பான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ (OTHELLO) கவிதை நாடகம் நேற்று (30) பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. பாடசாலை அதிபர் திருமதி G.K. தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. R. […]

Read More

ஆலையடிவேம்பில் “அத்தம” 2ஆம் கட்ட தேசிய தூய்மை வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

– கிரிஷாந் மகாதேவன் – “க்ளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” 2ஆம் கட்ட தேசிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விசேட வேலைத்திட்டம் ஆலையடிவேம்பில் இன்று சனிக்கிழமை (31) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பங்களிப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இத்தூய்மைப் பணி இடம்பெற்றதுடன், இதன் பிரதான நிகழ்வு கோளாவில் – […]

Read More