கல்முனையில் கடற்படையும் மதுவரித் திணைக்களமும் இணைந்த விசேட நடவடிக்கை- 6 கிலோ மூக்குத்தூளுடன் சந்தேகநபர் கைது
94 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட சட்டவிரோதப் போதைப்பொருள் பறிமுதல்கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் சிக்கினார்- மேலதிக விசாரணைக்கு மதுவரி அலுவலகத்தில் ஒப்படைப்பு பாறுக் ஷிஹான் இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ‘மூக்குத்தூள்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சோதனை நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (03) கல்முனைக்குடி பகுதியில் […]