November 23, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

இன்று காரைதீவில் அதிகாலையில் பாரிய மின்னல் தாக்கம்-பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜனின் வீடு சேதம் 

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில்  அதிகாலையில் ஏற்பட்ட பாரிய மின்னல் தாக்கத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் வீடு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று (6) வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் இடம்பெற்றது. காரைதீவு விபுலானந்த வீதியில் உள்ள தனியார் வங்கி பாதுகாப்பு ஊழியர் கணபதிப்பிள்ளை  தங்கநேசன் என்பவரின் வீடே இவ்வாறு பலத்த சேதமாகியது  வீட்டின் அன்டனா மீது தாக்கிய மின்னலால் வீட்டின் மின்சுற்று கட்டமைப்பு, மின் உபகரணங்கள் மற்றும் வீடு என்பனவற்றுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. […]

Read More

சமூக பாதுகாப்பு விருதினை பெற்றுக்கொண்ட நாவிதன்வெளி பிரதேச செயலகம்.

கே.எஸ்.கிலசன் கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் 2025ம் ஆண்டில் தேசிய மட்டத்திலான இலக்கை அடைந்தமைக்கான (1Million) சமூக பாதுகாப்பு விருதினை நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஆகியன பெற்றுக்கொண்டது. சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா, மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலகம் சார்பில் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்கள் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.

Read More

சமூகப் பாதுகாப்பு தேசிய விருது விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குக் கௌரவம்

(செல்வி வினாயகமூர்த்தி) இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தேசிய சமூகப் பாதுகாப்பு விருது வழங்கும் நிகழ்வு, இன்று (05) வியாழக்கிழமை மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் S.T. சுதாகாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வூதிய உரித்தற்ற பொதுமக்களுக்கு 60 வயதிற்குப் பின்னர் ஓய்வூதியப் பயனைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மட்ட அடைவைப் பெற்ற கிழக்கு மாகாணத்தைச் […]

Read More

கல்முனை மாநகர சபையின் 2027 பட்ஜெட்: சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பொதுமக்களின் பங்கேற்புடன் தயாரிப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில், மாநகர சபை கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன் அவர்களின் நெறிப்படுத்தலில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கல்முனை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். அப்துல் மஜீட், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது!

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா, இன்று (05.11.2026) மட்டக்களப்பு Golden River விருந்தினர் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, 2025ஆம் ஆண்டில் சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து, ஒரு மில்லியன் (1,000,000) என்ற இலக்கை எட்டிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறித்த விருதினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. T.J. அதிசயராஜ் அவர்கள் விழாவில் பெற்றுக்கொண்டார்.

Read More

கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி

பாறுக் ஷிஹான் புதன்கிழமை(4)  மாலை ஏற்பட்ட இத்தீ விபத்தையடுத்து கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன. எனினும், ஒரு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  தீயணைப்பு வாகனங்கள் நீரைச் சீரமைத்துத் தயார் நிலைக்கு வருவதற்குள் குறித்த வீடு முழுமையாகத் தீக்கிரையாகிவிட்டது. “அவசர காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதியானது. உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசர சேவையில் […]

Read More

தீபாவளி அன்று கௌரிகாப்பு& உபவாசம்; மறுநாள் பாரணை

( வி.ரி. சகாதேவராஜா) இம்முறை கேதாரகௌரி விரதத்தின் இறுதி நாள்  எதிர்வருகின்ற 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகும் .அன்று தீபாவளி. அன்றைய தினம் காப்பு கட்டுதல் நிகழ்வும்  உபவாசமும் இடம்பெறும்.மறுநாள் பாரணை.  இவ்வாறு கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியார் சிவஸ்ரீ  சண்முக மகேஸ்வரக் குருக்கள்,  விரதம் தொடர்பான விபரத்தை தெரிவிக்கையில் குறிப்பிட்டார் . அவர் மேலும் கூறுகையில்.. எதிர்வரும் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 11:56 க்கு அமாவாசை தொடங்குகிறது.  அதன் பின்பு தான் காப்பு […]

Read More

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின்  மாகாண பணிப்பாளர்   நியமனம் ரத்து: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பாறுக் ஷிஹான் மதிப்பீட்டுத் திட்டத்தை மீறி வழங்கப்பட்ட நியமனம் சட்டவிரோதமானது என அறிவிப்புஅனுமதிக்கப்பட்ட புள்ளியிடும் முறையின் கீழ் புதிய நேர்காணலை நடத்துமாறு ஆளுநர் மற்றும் ஆணைக்குழுவுக்கு உத்தரவு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட   ரீட் மனு (Writ Application)  வழக்கு விசாரணைகளின் முடிவில், ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த  கிழக்கு […]

Read More

சொறிக்கல்முனை – வீரமுனை வீதியில் ஆபத்தான வளைவு- இடிந்து விழும் அபாயத்தில் வீதிவடிகால் பணிகள் மந்தம் – சொறிக்கல்முனை – வீரமுனை வீதி அடைமழையால் மண் அரிப்பு

அம்பாறை மாவட்டம் வீரமுனை, நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வடிகால் அமைப்புப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதால் குறித்த வீதி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ச்சியான அடைமழை காரணமாக அதிகளவிலான நீரோட்டம் வடிகால் வழியாகப் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக வடிகாலின் இரு மருங்கிலும் பாரிய […]

Read More

வாதத்திறமையால் காலிறுதிக்கு முன்னேறிய வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் – நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன் வாழ்த்து 

( வி.ரி. சகாதேவராஜா) சக்தி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் “சொல்லால் வெல்வோம்… வெல்லும் வரை சொல்வோம்!” எனும் மாபெரும் விவாதப் போட்டியில், சம்மாந்துறை வலய நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட வேப்பையடி  கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் தமது அபாரமான விவாதத் திறமையால் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த,  குறித்த பாடசாலை அமைந்துள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், “இந்தச் சாதனை எமக்குப் பெருமை மட்டுமல்ல, எமது இளைய தலைமுறையின் […]

Read More