November 23, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

தீபாவளியையொட்டி காரைதீவில் அமரர் கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி: விவேகானந்தா அணி வெற்றி வாகை 

(வி.ரி.சகாதேவராஜா) தீபாவளியையொட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம்  நடாத்திய, அம்பாறை மாவட்டத்தின் தமிழ் அரசியலாளரும் வைத்தியருமான அமரர் சி. கதிர்காமத்தம்பியின் 26 ஆவது ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி – (Late Kathirkamathampy Memorial Trophy 2026,)   விவேகானந்தா கழகத் தலைவர் வீரசிங்கம் தயாபரன் தலைமையில் நேற்று முன்தினம் ( 07) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்தா  மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.  திருகோணமலை துறைமுக அதிகாரசபை ஊழியர்களின்  சார்பில் சிரேஸ்ட உத்தியோகத்தர் ஞானரெத்தினம் நவயுகன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் அனுசரணை ஏற்பாட்டைச் […]

Read More

அம்பாறை மாவட்ட பொலிஸாரின் தீபாவளி விசேட பூசை வழிபாடு – உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்பு!

அம்பாறை மாவட்ட பொலிஸாரின் தீபாவளி விசேட பூஜை வழிபாடு – உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்பு! ஜே.கே.யதுர்ஷன் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்ட பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு, நேற்று (08.11.2026) திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினரின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) A.S.P.C. சுஜித் […]

Read More

பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் தேவஸ்தானத்தில் கேதார கௌரி விரத நிறைவு நிகழ்வு

(செல்வி வினாயகமூர்த்தி) இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதத்தின் நிறைவு நிகழ்வையொட்டி, அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் தேவஸ்தானத்தில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 20.10.2026 அன்று ஆரம்பமான இவ்விரதத்தை, அடியார்கள் கடந்த 20 நாட்களாக ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டு சிவபெருமானை நினைத்து அனுஷ்டித்து வந்தனர். இதேவேளை, கேதார கௌரி விரதத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள பல ஆலயங்களிலும் விசேட பூஜைகள் மற்றும் […]

Read More

சம்மாந்துறை வலயத்தில் பசுமையான பாடசாலை நிகழ்வு

சம்மாந்துறை வலயத்தில் CLEAN SRI LANKA NEXT GEN – 2ஆம் கட்ட பசுமையான பாடசாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது! க.டினேஸ் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், CLEAN SRI LANKA NEXT GEN திட்டத்தின் 2ஆம் கட்ட பசுமையான பாடசாலை நிகழ்வு, அல் மர்ஜான் தேசிய பாடசாலையில் வலயக் கல்விப் பணிப்பாளர் S. Mahedrakumar அவர்களின் தலைமையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதான வளவாளராக AMM. Riyas (M.Phil), சிரேஷ்ட விரிவுரையாளர்,துறைத் தலைவர் […]

Read More

உகந்தமலை முருகனாலயத்தில்  இவ்வருடம் கந்தசஷ்டி திருவிழா,சூரசம்ஹாரம்  நடைபெறமாட்டாது!

படிக்கட்டு அபிஷேக பூசை மட்டுமே நடக்கும் என்கிறார் ஆலய பிரதம குரு சீதாராம் குருக்கள் ! (  வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தில் இம்முறை அதாவது நாளை மறுநாள் 10 ஆம் திகதி  ஆரம்பமாகும் கந்தசஷ்டி வழமைபோல் வீதியுலா, சூரசம்ஹாரம் சகிதம் இடம்பெற மாட்டாது. மாறாக  படிக்கட்டு அபிஷேக பூசை மட்டுமே இடம்பெறும் என்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தெரிவித்தார். பாலஸ்தாபனம் இடம்பெற்ற காரணத்தால்,இவ் வருட வருடாந்த கந்தசஷ்டி […]

Read More

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பின் ஒன்று கூடலும், கௌரவிப்பு நிகழ்வும்!

கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் 2026ஆம் ஆண்டுக்கான ஒன்று கூடலும் கௌரவிப்பு நிகழ்வும் SLR மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அறக்கட்டளையின் தற்போதைய தலைவர் அதிபர் திரு. கே. கமலநாதன் அவர்களின் தலைமையிலும், செயலாளர் திருமதி வதனா நிமோஜன் பொருளாளர் திரு. டி. நவநீதன் ஆகியோர் முன்னிலையிலும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்வுக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு. சந்திரகுமார் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். […]

Read More

காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறிலின் தீபாவளி வாழ்த்து!

மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!💗🙏🏻 (இலங்கை தமிழரசு கட்சியின் […]

Read More

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கிருஷ்ண பகவான், நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று அனைவரதும் மனங்களிலுள்ள இருள் அகன்று ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்துக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர். தீபாவளி பண்டிகையின் உண்மையான அர்த்தம் என்பது வெறும் வீடுகளை விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கு அப்பால் சென்று, மனித இதயங்களில் அன்பு, கருணை, சகோதரத்துவம் மற்றும் மானுடப் பண்புகளின் ஒளியை ஏற்றி வைப்பதாகும். எனவே, வெறுப்பிற்குப் பதிலாக கருணையையும், பிளவுகளுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தேர்ந்தெடுத்து, மேலும் சிறப்பான, நியாயமான மற்றும் பரிவுமிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வதற்கு தீபாவளிப் பண்டிகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து சமய மற்றும் கலாசார அடையாளங்களையும் மதிக்கும், அனைவரையும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் நடத்தும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய பொறுப்பிற்காக நாம் தற்போது உறுதியுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டும் வலுப்பெற்று, உலகிற்கு முன்னால் கௌரவத்துடன் நிமிர்ந்து நிற்கும் “அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக” இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நாம் ஒன்றாகப் பயணிக்கும் இந்தப் பாதையானது, இந்த தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்களின் ஒளியால் மேலும் ஒளிரட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் நிறைந்த  மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  அநுர குமார திசாநாயக்க,ஜனாதிபதி  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,2026 நவம்பர் 08

Read More

கந்தஷஷ்டி சொற்பொழிவுக்காக சுவிஸ்நாட்டுக்கு மீண்டும் பயணமான இளம் சொற்பொழிவாளர் சனாதனன் (சனா)

கந்தஷஷ்டி விரதத்தை முன்னிட்டு சுவிஸ் சூரிச் ஶ்ரீவிஸ்ணுதுர்கை அம்மன் ஆலயத்தில் கந்தபுராண தொடர் சொற்பொழிவிற்காக மீண்டும் இந்த வருடம் இரண்டாவது தடவையாக சொற்பொழிவாளர் நாகராசா சனாதன் இன்று பயணமானார். சூரிச்ஶ்ரீ விஸ்ணுதுர்கை அம்மன் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ முரளிசர்மா குருக்கள் அவர்களின் துணைவியார் ஜனனி அம்மணி ஆகியோர் இவருக்கான பயண ஒழுங்குகளை செய்து அழைத்துள்ளனர். இவர் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்ரிய உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் இவரது ஆன்மீக சொற்பொழிவு மக்களால் பெரிதும் விரும்பப்படுவதால் இலங்கையில் பல ஆலயங்களுக்கும் […]

Read More

எதிர்கட்சி தலைவர் மட்டக்களப்பு மேச்சல் தரை தொடர்பாக வாய் திறக்கவில்லை. மட்டக்களப்பில் இவருக்காக வாக்கு சேகரித்தோரின் பதில் என்ன? -பா.அரியநேத்திரன் மு.பா.உ

மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு,மாதவனை அத்துமீறல் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சஜீத் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகம் வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கூறுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றவர் மட்டக்களப்பில் ஒரு அனியாயம் நடக்கும் போது பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக உள்ள சஜீத்பிரமதாச இதுவரை அதைப்பற்றி அலட்டாமல் இருப்பது அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளில் அத்து மீறி பயிர்செய்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்று மாறு இதுவரை எதிர்கட்சி தலைவர் ஏன் கூறவில்லை இந்த விடயம் தொடர்பாக ஏன் வாய்திறக்கவில்லை.  கடந்த 2024 ,யூலை,24, ல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்து, மயிலத்தமடு மாதவனை பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதாக பகிரங்கமாக உறுதியளித்திருந்தார். தற்போது ஆட்சியில் இல்லை என்ராலும் எதிர்கட்சி தலைவர் என்ற சிறப்புரிமையை பாவித்து நாடாளுமன்றில் மேச்சல் தரை தொடர்பாக விவாதிக்முமுடியும் அதற்கு சிரமமாக இருந்தால் நாடாளுமன்றில் இது தொடர்பாக உரையாற்றி இருக்கலாம் இரண்டு வருடங்களாக எதிர்கட்சி தலைவராக இருந்து விகாரைகளையும்,புத்தர் சிலைகளையும் பற்றி உரையாற்றும் இவர் மேச்சல் தரை விடயத்தை கணக்கெடுக்காமல் இருப்பது அவருடைய இனவாதம் வெளிப்படுகிறது என்பதே உண்மை. கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய 139110, வாக்குகளை பெற்றார் இரவு பகலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி ஒரு அணியினர் விசுவாசமாகவும். அற்பணிப்பாகவும் சுவரொட்டிகளை ஒட்டியும், துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தும் மேடை போட்டும் பிரசாரம் செய்தனர் அவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 139110, மொத்த வாக்கு சஜீத் ஜனாதிபதி தேர்தலில் பெற்றார் அதில் மட்டக்களப்பு தொகுதியில் 64,068, வாக்குகளும்.கல்குடா தொகுதியில் 45,325,வாக்குகளும்,பட்டிருப்பு தொகுதியில் 26512, வாக்குகளும்,தபால் மூலமாக 3205,வாக்குகளும் அவருக்கு கிடைத்தன. தற்போது ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து சஜீத் எதிர்கட்சியாக தெரிவாகி இரண்டு வருடங்கள் கடக்கிறது ஆனால் இதுவரை மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பண்ணையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.  இரண்டு வருடங்களாக தொடர்போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், பசு மாடுகள் வெட்டி கொலை, பண்ணையாளர்கள் கடத்தல். என தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.இது பற்றி அவரும் அவருடை கட்சி உறுப்பினர்களைம் மௌனம் காப்பது தென்னிலங்கை பிரதான அரசியல் தலைவர்கள் எவரும் கணக்கெடுக்காமல் இருப்பதும் அவர்களுடைய இனவாத முகங்கள் மீண்டும் நிருபணமாகியுள்ளது. பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்தும், மேச்சல் தரை தொடர்பாகவும் தேர்தல் காலத்தில் மட்டக்களப்புக்கு சென்று வாக்குறுதிகளை வழங்கும் இவர்கள் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்தால் மாற்றான்தாய் மனப்பாங்குடன் இருப்பது ஏன் என்பதை தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த  2026,நவம்பர்,02, அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒரு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.அதுதொடர்பாக நாடாளுமன்றில் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,இஶ்ரீநாத் ஆகியோர் அங்கு நடக்கும் அத்து மீறல் தொடர்பாகவும், அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு தொடர்பாகவும். தற்போதைய அரசுதொடர்பாக விளக்கமாக உரையாற்றினர். உண்மையில் பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவர் இந்த விடயம் தொடர்பாக தமது கருத்தை கூறவில்லை அதனை விட்டு விலகி வேறு விடயங்களை மட்டுமே அவர் தொடர்ந்து பேசிவரிகிறார். ஆனால் ஒவ்வொரு மாதமும் தமிழ் பேசும் கட்சிகளை தமது அலுவலகத்தில் அழைத்து கூட்டம் நடத்துகிறார் மேச்சல் தரை தொடர்பாக அவர் அந்த கலந்துரையாடல்களில் பேசினாரா பேசவில்லையா என்பதை கூட அவருடைய ஊடக குழு வெளியிடவில்லை வடகிழக்கு மக்களால் தெரிவான தமிழ் தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் அவருடன் உரையாடுகிறார்கள் படங்கள் காட்டப்படுகின்றன மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை தொடர்பாக இதுவரை ஒரு எதிர்கட்சி தலைவர் இதை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசவில்லை என கேட்காமல் தலையாட்டி வருகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் அக்கறை காட்டவில்லை எனில் ஏன் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் எதுர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேரத்தை வீண்டிக்கவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

Read More