November 23, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

வீதியோர ஆக்கிரமிப்புகளைத் தவிர்ப்போம்: நிந்தவூர் பிரதேச சபை அவசர அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சீரான பொதுப் போக்குவரத்திற்கு வழிவகுக்கவும் நிந்தவூர் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்குச் சபை நிர்வாகத்தினால் விசேட விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள பிரதான மற்றும் உட்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் இடையூறாக அமைந்துள்ள மரக்கிளைகள், புதர்கள், பூச்செடிகள், சட்டவிரோதப் படிக்கட்டுகள் மற்றும் ஏனைய தடைகளை உடனடியாக அகற்றுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், வீதியோரங்களில் நீண்டகாலமாகக் […]

Read More

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய ஆசிரியர் கலைஞர் ஏ. ஓ. அனல் மாகாண மட்டத்தில் முதலிடம்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் நடாத்துகின்ற கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான “பிரதீபா” அகில இலங்கை சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சித்திர பாட ஆசிரியராக சேவையாற்றும் கலைஞர்.ஏஓ.அனல் (வி.ஜீவராசா) மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நாட்டிலுள்ள பல்வேறு கலாசார மத்திய நிலையங்களில் நேரடியாக நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.இவர் 2024, 2025 ஆம் ஆண்டுகளில் மாகாண மட்டத்தில் […]

Read More

மாலையில் வெளியே சென்றவர் காலையில் சடலமாக மீட்பு !கோமாரியில் மர்ம  சம்பவம் 

மாலையில் வெளியே சென்றவர் காலையில் சடலமாக மீட்பு !கோமாரியில் மர்ம  சம்பவம்  ( வி.ரி. சகாதேவராஜா) வயல் காவலுக்காக செல்ல வேண்டும் சாப்பாட்டை கட்டி வையுங்கள்  என்று தாயாரிடம் சொல்லிவிட்டு மாலையில் வெளியேறிச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் பொத்துவில் பொலீஸ் பிரிவிலுள்ள கோமாரி எனும் கிராமத்தில் இன்று (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. கோமாரியைச் சேர்ந்த 34 வயதுடைய யோகராசா மதன் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். அம்பிளாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட […]

Read More

​மண்டூரில் மோட்டார் சைக்கிள்கள் விபத்து: முதியவர் உயிரிழப்பு!

சௌவியதாசன் மட்டக்களப்பு – வெல்லாவெளி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டூர் 13 ஆம் கிராமம், விளினி அடி சந்தி பகுதியில் இன்று (நவம்பர் 10) காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ​இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.​இந்த விபத்தில் படுகாயமடைந்த சதானந்தம் மண்டூர் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த சதானந்தம் (வயது 65 மதிக்கதக்க ) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விபத்தில் மற்றொருவரும் […]

Read More

இயற்கை வேளாண்மை மற்றும் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பயிற்சிச் செயலமர்வு

(வி.ரி.சகாதேவராஜா) மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் இயற்கை வேளாண்மைச் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிற்சிச் செயலமர்வு  கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் திருமதி பி. லோகேஸ்வரி  தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் வளவாளர்களாக காரைதீவு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட விவசாயப் போதனாசிரியருமான ஆர். விஜயராகவன் மற்றும் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாயப் போதனாசிரியர்  ரி. செந்தூரன் ஆகியோர் […]

Read More

நாளை உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர்  ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் இலங்கை வருகிறார்!

( வி.ரி.சகாதேவராஜா)  இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் நாளை(11) புதன்கிழமை  இலங்கை வருகிறார். நாளை மறுதினம் (12) வியாழக்கிழமை முதல் 17ஆம் திகதி வரை ஆறு தினங்கள்  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நூற்றாண்டு விழா தொடர்பாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த […]

Read More

Brampton BRAC அமைப்பின் “தலைவரின் உயரிய சிறப்பு விருது” பெற்றார் சமூக சேவையாளர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு)

சௌவியதாசன். கனடா வாழ் தமிழர் சமூகத்தில் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மிக்க தலைமைத்துவம் மற்றும் மனிதநேயப் பணிகளின் மூலம் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ள விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) அவர்கள், அண்மையில் BRAC அமைப்பினால் வழங்கப்பட்ட“தலைவரின் உயரிய சிறப்பு விருது” பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். BRAC அமைப்பின் தலைவர் குரியன் அவர்கள் வழங்கிய இந்த உயரிய விருது, பல தசாப்தங்களாக அவர் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகளுக்கான சிறப்பான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இந்த விருது மட்டுமல்லாது, சமூக சேவையில் அவர் […]

Read More

மஹாஓயா ஆதார வைத்தியசாலை மூன்றாம் இடம்; தேசிய உற்பத்தித்திறன் போட்டி விருதை வென்றது

(செல்வி வினாயகமூர்த்தி) தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் (08) ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, பொதுத்துறைப் பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மஹாஓயா ஆதார வைத்தியசாலைக்கு தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது. இந்தச் சாதனையைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய […]

Read More

உலக சாதனை நடன நிகழ்வில் மண்டூர் நடனக்கலைஞர்களும் பங்கேற்பு.

-கே.எஸ்.கிலசன்- கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற நாட்டிய சுடர் ஒளி விருதுக்கான உலகசாதனை நிகழ்வில் மண்டூர் கணேஷபுரம் சார்பாக கண்ணகி நிருத்தியாலய மாணவர்கள் பங்கு பற்றி சாதனை நிகழ்த்தி உள்ளார்கள். மண்டூர் பகுதியை சேர்ந்த கிராமங்களில் நடனத்துறையில் ஆர்வமுள்ளவர்களைஇணைத்து கண்ணகி நிருத்தியாலய ஸ்தாபகர் ஜெயலதா சுமேந்திரராஜவின் வழிகாட்டுதலுடன்நடன ஆசிரியை திருமதி.வினித்தா நிலக்சன் அவர்களின் நெறிப்படுத்துதலுடன் பல மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி உலகசாதனை விருதினை பெற்றுக்கொண்டனர். படுவான்கரை பிரதேசத்தில் அதிகஷ்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் இவ்வாறானதொரு உலக […]

Read More

நாவிதன்வெளி பாரதி விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு

-சர்மிலன்- நாவிதன்வெளி பாரதி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டுக்கான பொது சீருடை வெளியீட்டு விழா (09.11.2026) நாவிதன்வெளி பல்தேவைக் கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக உறுப்பினர்களின் பெற்றோர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இதன்போது பாரதி விளையாட்டுக்கழகத்தின் வீரர்களுக்கான பொது சீருடைகள் வெளியிட்டு வழங்கப்பட்டதுடன், வளர்ந்து வரும் பாரதியின் இளம் சிறார்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கும் ஆடைகள் வழங்கப்பட்டன. இச்செயற்பாடு இளம் தலைமுறையினரை விளையாட்டுத்துறையில் ஊக்குவிப்பதுடன், கழகத்தின் எதிர்கால வளர்ச்சியில் அவர்களையும் இணைத்துக்கொள்ளும் முக்கிய […]

Read More