November 23, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

அம்பாறை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று (07) இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்போது பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதுடன், மின்சாதனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் வெளிப்புற விளையாட்டுகள், கட்டுமானப் பணிகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொதுநிகழ்வுகளைத் […]

Read More

தீபாவளி – ஒளி ஏற்றும் திருநாள் மட்டுமா? இருளை அகற்றும் தீபம்… உள்ளங்களை மாற்றும் ஒளி! -சிறப்புக்கட்டுரை

தீபாவளி வந்துவிட்டது என்றாலே வீடுகள் தோறும் புத்தாடைகள், இனிப்புகள், விளக்குகள், பட்டாசுகள் எனக் கொண்டாட்டக் களைகட்டும். சிறுவர்களின் முகங்களில் மகிழ்ச்சி; பெரியவர்களின் உள்ளங்களில் உறவுகளைச் சந்திக்கும் எதிர்பார்ப்பு; வியாபார நிலையங்களில் விற்பனைச் சுறுசுறுப்பு என எங்கும் ஒரு விழாக்கோலம். ஆனால், ஒரு கணம் நின்று சிந்திப்போம். தீபாவளி என்பது வெறுமனே ஒரு நாள் கொண்டாட்டமா? அல்லது மனித வாழ்வையே மாற்ற வேண்டிய ஒரு தத்துவச் செய்தியா? ‘தீபாவளி’ என்ற சொல்லே ஒளியின் வரிசையைக் குறிக்கின்றது. இருளை அகற்றி […]

Read More

கல்முனை நெற் குழுமம் கார்மேல் பற்றிமாவின் புதிய அதிபர் அருட்தந்தை லெபோன் சுதன் அவர்களுடன் சந்திப்பு!

கல்முனை நெற் கடந்த பத்து வருடங்களை தாண்டிய பயணம் தனியாக செய்திச் சேவைகளோடு மாத்திரம் நின்றுவிடாது இப்பிராந்தியத்தில் பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் செய்துவருகின்றது. இப்பிரதேச முக்கிய நிறுவனங்களுடனும் அதன் தலைமைகளுடனும் சமூக நலன் சார்ந்து வலுவான உறவை பேணிவருகின்றதன் அடிப்படையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிபர் அருட்தந்தை வண.லெபோன் சுதன் அவர்களை கல்முனை நெற் குழுமம் சந்தித்தது கலந்துரையாடியது.

Read More

அறபு, இஸ்லாமிய கல்வியை இலங்கையில் வளர்ப்பதில் சவூதி அரசின் பங்களிப்பு -இலங்கையின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் பாரிய ஒத்துழைப்பு.!- அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர் கனிஹாமி

✍️அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர் கனிஹாமி, MA, PhD (R) இலங்கையின் முஸ்லிம் சமூகம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் பத்து சதவீதத்தினரைக் கொண்டது, மேலும் அவர்களில் பெரும்பான்மையினர் இலங்கை மூர் இனத்தவராவர், தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களாவர் (Islam in Sri Lanka, 2026). இந்தச் சமூகத்தின் மத அடையாளத்திலும் கலாசார வாழ்வியலிலும் அறபு மொழியும் இஸ்லாமிய கல்வியும் நூற்றாண்டுகளாக மையமான இடத்தை வகித்து வருகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டு முதலே அரேபிய வணிகர்கள் இலங்கைத் துறைமுகங்களுடன் தொடர்பு […]

Read More

பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அகற்றும் பணி ஆரம்பம்: முகத்துவார நீர்மட்ட அதிகரிப்புக்கான காரணம் குறித்து நீர்ப்பாசனப் பொறியியலாளர் விளக்கம்.

(செல்வி வினாயகமூர்த்தி.) அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழ் தேங்கியுள்ள சல்வினியா (Salvinia) மற்றும் ஆற்று வாழைத் தாவரங்களை அகற்றும் பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் காலநிலையைக் கருத்திற்கொண்டு வெள்ளநீர் தடையின்றி வடிந்தோடுவதற்கு ஏதுவாக சின்னமுகத்துவாரம் ஏற்கனவே அகழ்ந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும், பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அடர்த்தியாகப் படர்ந்துள்ளமையால் நீரின் வடிந்தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு குறித்த தாவரங்களை அகற்றும் […]

Read More

இந்திய தூதரக அதிகாரியுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலை தொடர்பான கலந்துரையாடல்; மூன்று எம்பிக்கள் பங்கேற்பு!

( வி.ரி.சகாதேவராஜா) இந்திய தூதரக அரசியல் விவகார செயலாளர் ராம்பாபுவுடன், கல்முனை ஆதார வைத்தியசாலை தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. கொழும்பு கோல் பேஸ் கோட்டலில் இன்று (6) காலை இச் சந்திப்பு இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன், ஞா. ஸ்ரீநேசன், ,ரி.சத்தியலிங்கம் ஆகியோருடன்  கல்முனை ஆதார வைத்தியசாலை குழுவின் தவிசாளர் சந்திரசேகரம் ராஜன், பொருளாளர் இ.ரூபசாந்தன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் . ஆதாரவைத்தியசாலையின் அவசிய தேவைகள் குறித்து அங்கு ஒருமணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. […]

Read More

விசேட தேவையுடைய மாணவர் விளையாட்டில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை!

( வி.ரி.சகாதேவராஜா)  விசேட தேவையுடையோருக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று  (05.11.2026) நடைபெற்றது. மேற்படி வலயம் பெற்ற வெற்றி விபரங்களின்படி முதலாம் இடங்கள் – 12,இரண்டாம் இடங்கள் – 03, மூன்றாம் இடங்கள் – 03 ஆகும். திருக்கோவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் (விசேட கல்விப் பிரிவு) மற்றும் திருக்கோவில் பொத்துவில் மத்திய […]

Read More

இந்துக் குருமார் அமைப்பின் -தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி

தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய சமூகச் சிந்தனையும் நம்பிக்கையும்தீபாவளி என்பது இந்துக்களின் பாரம்பரியத்திலும் ஆன்மிக வாழ்வியலிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள மகத்துவம் மிக்க திருநாளாகும். இருளை அகற்றி ஒளியை ஏற்றுகின்ற இத்திருநாள், வெறுமனே ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மட்டும் அமையாமல், ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் குடிகொண்டிருக்கும் அறியாமை, தீய எண்ணங்கள், பகைமை, பொறாமை, காழ்ப்புணர்வு போன்ற இருள்கள் அகன்று, அன்பு, அறம், ஒற்றுமை, மனிதநேயம் ஆகிய உயரிய பண்புகள் மேலோங்க வேண்டும் என்ற ஆழமான […]

Read More

சம்மாந்துறை அல்-அர்சத் அதிபர் எம். அப்துல் ரஹீமுக்கு கோலாகலமான பிரியாவிடை விழா!

(மின்மினி மின்ஹா) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். அப்துல் ரஹீம் (SLPS-I) அவர்களின் அரச சேவை ஓய்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான பிரியாவிடை விழா நேற்று (05) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PPA) மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை […]

Read More

தீபாவளிக்கான சிறப்பு வில்லுப்பாட்டு  

(  வி.ரி.சகாதேவராஜா) தீபாவளி சிறப்பை கொண்டாடுமுகமாக,  கல்முனை நெற் ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் இணைந்து வில்லுப்பாட்டு ஒன்றை வெளியிடவுள்ளது. “போதையால் வந்த வாதை ” எனும் தலைப்பிலான இவ் வில்லுப்பாட்டு நேற்று பெரிய நீலாவணை கலாச்சார மண்டபத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா, ஒருங்கிணைப்பு மைய செயலாளர் கா. சாந்தகுமார்   திட்ட இணைப்பாளர் பி.சந்திரமோகன், பொறுப்பாளர் என்.சௌவியதாசன் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தி ஒளிப்பதிவு செய்தனர். தொடர்ந்து […]

Read More