November 23, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

கல்முனை  ஆதார வைத்தியசாலையில் உடற்பயிற்சி மையம் திறந்துவைப்பு 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை  ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி மையம்  (Gym Centre) அண்மையில் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் இப் புதிய ஜிம் நிலையத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். இதில் கார்மேல் பற்றிமாவின் அதிபர் அருட்தந்தை லெபோன் சுதன் , உட்பட பல முக்கிய அதிதிதகளும் கலந்து சிறப்பித்தனர் அந்த நிலையம் கடந்த ( 9) திங்கள் முதல் […]

Read More

றாணமடு இந்துவுக்கு கல்முனை ரோட்டரிக்கழகம் இசைக்கருவிகள்  வழங்கிவைப்பு 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக்கழகம் அதன் மேலும் ஒரு முயற்சியாக  சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள மத்திய முகாம் றாணமடு இந்துக்கல்லூரி மாணவ இசைக்குழுவுக்கான இசைக்கருவிகளை,( Band musical instruments) வழங்கி வைத்தது.  இந்நிகழ்வு  கல்முனை றோட்டரிக்கழகத் தலைவர் ரோட்டரியன் இ.திருநாவுக்கரசு தலைமையில் நேற்று முன்தினம் (5) நடைபெற்றது. நிகழ்வில் சம்மாந்துறை வலய பிரதி வலயக்கல்விப்பணிப்பாளர் பூ. பரமதயாளன், கழக செயலாளர் ரோட்டரியன் மு.சிவபாதசுந்தரம்,  மற்றும் அங்கத்தவர்களான ரோட்டரியன் ஐ.தரணிதரன், ரோட்டரியன் மு.அமிர்தசங்கர் , அதிபர்,ஆசிரியர்களும் […]

Read More

பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால் பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதி பங்களிப்பு!

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கி வருகின்ற பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பானது சமூகப்பணிக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்று வரையில் ஆலயங்களில் சரியைத்தொண்டுகள் மற்றும் எண்ணெய்க்காப்பு , தேர்த்திருப்பணிகள் மற்றும் ஆலய திருப்பணி வேலைகளுக்காக நிதியுதவிகள் என்பவற்றை செய்து அமைப்பின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு தீபாவளி தினமான நேற்றைய தினம் பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால் பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது. .

Read More

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு நாகரெத்தினம் மேனரூபன் தெரிவு

பா. மேனன் மட்டக்களப்பு மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரெத்தினம் மேனரூபன் இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரெத்தினம் யோகநாயகி தம்பதிகளின் புத்திரனான மேனரூபன் ஐந்து பெண் சகோதரிகளுடன் பிறந்தவர் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று 2006 இல் முதல் தரத்திலே கலைப்பிரிவில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு […]

Read More

இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அக்கரைப்பற்று சமூகப் பொலிஸ் ஆலோசனைக் குழு கௌரவிப்பு

(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி D.M. சுனில் ரத்னாயக்க இடமாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு, அவரது சேவையைப் பாராட்டி அக்கரைப்பற்று சமூகப் பொலிஸ் பிரிவின் ஆலோசனைக் குழுவினரால் இன்று (08) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஆலோசனைக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டம், ஒழுங்கைப் பேணுவதிலும், பொதுமக்களுடனான […]

Read More

கதிரியக்கவியலாளர்(Radiographer) பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மேற்படி 2026.01.16 அன்று பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கதிரியக்கவியளாளர் எனும் பதவிநிலைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்து இருந்த நிலையில் கதிரியவியலாளர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான வர்த்தமானியின் 30.10.2026 இவ் வருடத்தில் புதிதாக பௌதிகவியல் பாடத்தில் திறமை சித்தி கோரப்பட்ட நிலையில் சாதாரண சித்தியுடன் குறித்த பட்டபடிப்பினை நிறைவு செய்த பட்டதாரிகள் இக் கோரிக்கையினால் குறித்த பதவி நிலைக்கு உள்வாங்கப்படுவதில் பாதிக்கப்பட்டுள்ளனர்இதனால் இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரைகளான 12,மற்றும் 14 மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இன்று இந்த முறைப்பாடு சட்டத்தரணி அ.நிதான்சன் மற்றும் […]

Read More

போதைப்பொருள் ஒழிப்புக்கு மீண்டும் அவசியமாகும் விசேட அதிரடிப்படையின் வீதியோரச் சோதனைகள்

பாறுக் ஷிஹான் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் வரை போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத் தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை சமூகத்தின் மத்தியில் காணப்படும் பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கடந்த யுத்த காலத்தில் இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. அக்காலப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் […]

Read More

கோட்டாபய ராஜபக்ஷவிடம் மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB ) வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CCIB முன்னிலையாகியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, ஒரே நேரத்தில் இரண்டு அரசாங்க நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கான விருது கொழும்பில் வழங்கி வைப்பு

இலங்கையில் கல்முனை ஆதார வைத்தியசாலை இரண்டாம் இடம்; தேசிய உற்பத்தித்திறன் போட்டி விருதை வென்றது ! ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் 2025/2026 போட்டியில் தேசிய ரீதியாக தங்க விருது, 1ம், 2ம், மற்றும் 3ம் இடங்களை பெற்றுக்கொண்ட அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் நேற்று  (08.11.2026) தீபாவளியன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுத்துறையில் தேசிய ரீதியில் 2ம் இடத்தினை கல்முனை ஆதார […]

Read More

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி – கார்மேல் பற்றிமா கல்லூரி மீண்டும் சாதனை!

12 பாடசாலைகளுடன் போட்டியிட்டு இரண்டாம் இடம் – வெள்ளிப் பதக்கம் வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள்! கிழக்கு மாகாண பாடசாலைக்கு இடையிலான குழுநிலை சதுரங்கப் போட்டியில், கார்மேல் ப்ற்றிமா பாடசாலையின் மாணவ மாணவிகள் பங்குபற்றி தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன், சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளனர். அந்தவகையில் 04 பிரிவுகளில் 07 அணிகள் ( 47 மாணவர்கள் ) பங்குபற்றி, அவ் 07 அணிகளுமே வெற்றி பெற்றுள்ளன. ( 1st Runner up – 04, […]

Read More