November 23, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

பலாங்கொடை கஸ்ஸப தேரர் அதிரடியாகக் கைது!

கலவரத்தைத் தூண்டும் வகையில் சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

பொறுப்பற்ற வாகன ஓட்டத்தால் பறிபோன உயிர்; நீதி கோரி பட்டியடிப்பிட்டியில் பேரணி

பொறுப்பற்ற வாகன ஓட்டத்தால் பறிபோன உயிர்நிசாம் ஹாஜியாரின் மரணத்திற்கு நீதி கோரி பட்டியடிப்பிட்டியில் பேரணி பாறுக் ஷிஹான் பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத வாகன ஓட்டத்தால் வீதிகளில் அநியாயமாகப் பறிபோகும் உயிர்களுக்கு நீதி கோரியும், வீதிப் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வலியுறுத்தியும் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பகுதியில் மாபெரும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் வியாழக்கிழமை (11) மாலை  இடம்பெற்றது. கடந்த 06ஆம் திகதி இரவு, இஷாத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் சென்றுகொண்டிருந்த அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியைச் சேர்ந்த நிசாம் ஹாஜியார் என்பவர், 17 […]

Read More

விசேட தேவையுடையோருக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மாணவர்களுக்குக் கௌரவிப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி) விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்ற கமு/திகோ அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் (விசேட கல்விப் பிரிவு) மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (11) புதன்கிழமை பாடசாலையின் காலை ஒன்றுகூடல் நிகழ்வின்போது நடைபெற்றது. கடந்த 05.11.2026 வியாழக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் கல்வி வலயத்திலிருந்து கமு/திகோ அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் […]

Read More

திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய பாலாலய கும்பாபிஷேகத் திருவிழா இன்று ஆரம்பம்.

(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கள்ளியந்தீவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தின் பாலாலய கும்பாபிஷேகத் திருவிழா இன்று (12) வியாழக்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இவ்வாலயத்தின் பாலாலயக் கிரியைகள் சிவஸ்ரீ க.கு. சிதாராமக் குருக்கள், சிவஸ்ரீ க.கு. சச்சிதானந்த சிவம் குருக்கள் தலைமையில் பாலஸ்தாபன பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம கோவர்த்தன குருக்கள், ஆலய குரு ஐ. ஜெயபிரசாந்சர்மா மற்றும் ஆலய பிரதமகுரு […]

Read More

அனோஜனுக்கு விடுதலை கிடைத்தது

சவூதியில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராஜாவுக்கு விடுதலை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அனோஜனின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த விடுதலை கிடைத்துள்ளது. அனோஜனின் விடுதலை தொடர்பில் செயற்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான பொறியியலாளர் சிவதர்சன்  (Kalmunai Net) க்குத் தெரிவிக்கையில், வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாகக் கூறினார் . இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சிவராசா அனோஜனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Read More

இன்று தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தில் இந்திய ஸ்ரீ கார்த்திகேயா முருகர் ஜம்பொன் சிலை பிரதிஷ்டை! 

( ஷீரடியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) இலங்கை புண்ணிய மண்ணில் கலியுக தெய்வம் கந்தப்பெருமானின் அருள் பெருகும் வகையில்,   திருக்கோவில் தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள சீரடி கருணாலயத்தில், ஸ்ரீ கார்த்திகேயா முருகர் ஜம்பொன் சிலை இன்று (11.11.2026) புதன்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள், கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல சொற்பொழிவாளர் முருகனருட் செல்வர் ஜெயம் எஸ்.கே.கோபியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அற்புத நிகழ்வில், ஷீரடி சாய்பாபா கருணாலய ஸ்தாபகர் திருமதி சீதா விவேக்( […]

Read More

கஸ்ஸப தேரருக்கு பிடியாணை!

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறிய பலாங்கொடை கஸ்ஸப தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. திருகோணமலை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, கஸ்ஸப தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் […]

Read More

கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவில் 205ஆவது கொடியேற்று விழா கோலாகல ஆரம்பம்

பாறுக் ஷிஹான் நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்பெறும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 205ஆவது வருடாந்தக் கொடியேற்று விழா இன்று (10) கோலாகலமாக ஆரம்பமானது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் […]

Read More

கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் சி. சுதாகரன் ஓய்வு!

கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் திரு. சி. சுதாகரன் அவர்களின் சேவைக்கால நீடிப்பு நிறைவு பா.மேனன் கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. சி. சுதாகரன் அவர்களுக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட சேவைக்கால நீடிப்பு நிறைவடைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய அவர், கடந்த 2002 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்திற்கான பதில் பணிப்பாளராகவும் நியமனம் பெற்றார். 29/01/2026 அன்று அரச சேவையிலிருந்து முறையாக ஓய்வு பெறும் […]

Read More

நாவிதன்வெளியில் நுளம்புப் பெருக்குக் காணப்பட்ட இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டு  உடனடிச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுகளும் வழங்கல்

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்  ஆலோசனைக்மைவாக  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதார அதிகாரி  பிரிவில் அமைந்துள்ள கமுஃசதுஃவிவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நுளம்பு கட்டுப்பாடு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விசேட பரிசோதனையின்போது பாடசாலை வளாகங்கள், நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்குச் சாதகமான சூழல்கள் என்பவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. நுளம்புப் பெருக்குக் காணப்பட்ட […]

Read More