செல்லையா பேரின்பராசா
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (28.10.2026) புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்.கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர நாடாவை வெட்டி இக் கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கௌரவ அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் விசேட அதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் வ.பிரபாகரன் ஊவா வெல்லஸ் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளர் ஹிபத்துல் கரீம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன், இந் நிகழ்வின் பிரதம அதிதியான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர பாடசாலை சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.





