சுகயீனம் காரணமாக நேற்று இரவு எம்மை விட்டுப் பிரிந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தனது இறுதி மூச்சுவரை தமிழ்த் தேசியக் கொள்கையை மட்டுமே சுவாசித்தவர். எத்தனையோ இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொண்ட போதிலும், தனது கொள்கையில் உறுதியாக நின்று இறுதிவரை பயணித்தவர் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், நானும் அரசியலில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் அன்னாருடன் நெருங்கிப் பழகிய பல சந்தர்ப்பங்களும், அவருடனான நினைவுகளும் என்றும் எனது மனதைவிட்டு அகலாதவை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.