பாண்டிருப்பு மகா விஷ்ணு வித்தியாயலத்திற்கு தேவை அறிந்து நிழ்ல்பிரதி இயந்திரம் ஒன்iறு வழங்கி வைக்கப்பட்டது.
பல்வேறு சமூக சேவைகளை பரவலாக செய்துவரும் திரு திருமதி விஜயகுமாரன் குபேரலெட்சுமி தம்பதியினரால் இந்த அன்பளிப்பு செய்யப்பட்டது. திருமதி விஜயகுமாரன் குபேரலெட்சுமி (ஜீவா) அவர்கள் விடுமுறையில் தாயகம் வந்திருந்தபோது கடந்தவாரம் பாடசாலை அதிபர் திருமதி கலைமதி சுரேஸ் அவர்களிடம் பாடசாலையில் வைத்து இந்த நிழல்பிரதி இயந்திரத்தை வழங்கி வைத்தார். இத்துடன் பாடசாலைக்கான இணையவசதிக்கான மாதாந்த கட்டணத்தையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தார். இவற்றுக்காக பாடசாலை சமூகம் நன்றியினை தெரிவித்தனர்.
