October 31, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கமு/ கணேஷா மகாவித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு!

கமு/ கணேஷா மகாவித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு!

”வாசிப்போம் கற்போம் எதிர்காலத்தை வெல்வோம்’ ” எனும் தொனிப்பொருளில் அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கமைய தேசிய வாசிப்பு மாத நிகழ்வு பாடசாiலைகளில் ,இடம்பெற்றுவருகிறது.

அதன் அடிப்படையில் சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலத்தில் வாசிப்பு மாத நிகழ்வும், மாணவர்களுக்கான போட்டிகளும்இடம் பெற்றன.

அதன் இறுதி நிகழ்வும், பரிசளிப்பும் இன்று 30.10.2026 பாடசாலை அதிபர் எஸ்.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.


இதில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய வெற்றியீட்டிய மாணவர்கபளுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சுரேஸ் அவர்களும் , மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.லக்குணம் , EPSI இணைப்பாளர் T.ரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு அதிதிகளாக பழைய மாணவர் சங்கத்தினர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *