October 31, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கல்முனை நகரை பூச்சாடிகளால் அழகுபடுத்தும் வேலைத் திட்டம்.!

கல்முனை நகரை பூச்சாடிகளால் அழகுபடுத்தும் வேலைத் திட்டம்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை நகரை அழகுபடுத்தும் பொருட்டு நகர நெடுஞ்சாலையில் பூச்சாடிகள் வைக்கும் வேலைத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (30) மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அன்ஸார், கல்முனை மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இவ்வேலைத் திட்டத்தின் பிரகாரம் கல்முனை பிரதான பஸ் நிலைய சந்தி முதல் தரவைக் கோவில் சந்தி வரையான இருபக்க போக்குவரத்து பாதையின் நடுவே பூச்சாடிகளை வைத்து அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *