செல்லையா பேரின்பராசா .
அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 01 இற்கு 16.06.2026 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயம் , மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசியப் பாடசாலை என்பவற்றின் பழைய மாணவியான இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரியாவார்.
20.12.2013 இல் உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையாக தனது கல்விப் பணியை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை) தொடங்கிய இவர், இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் (Open Exam) சித்தியடைந்து 16.06.2014 இல் இச் சேவைக்கு நியமனம் பெற்று பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் என்பவற்றில் பணியாற்றி, 01.01.2023 ஆந் திகதி தொடக்கம் அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
தனது கல்வித் தகைமை, தொழில் தகைமை என்பவற்றை உயர்த்திக் கொள்வதில் அதீதி ஈடுபாடு காட்டிவரும் இவர் கல்வி முதுமாணிப் பட்டத்தினையும், பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி நிர்வாக டிப்ளோமா என்பவற்றையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கணக்காளராகப் பணியாற்றும் பொன்னம்பலம் பிரியதர்சனின் துணைவியாராவார்.