October 31, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கடவுச்சீட்டு பெறுவதற்கு ஒன்லைன் முன்பதிவு கட்டாயம்!

கடவுச்சீட்டு பெறுவதற்கு ஒன்லைன் முன்பதிவு கட்டாயம்!

ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், இன்று (29) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஒன்லைன் ஊடாக முன்கூட்டியே நேரத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் தமக்கான திகதி மற்றும் நேரத்தை ஒன்லைன் ஊடாக ஒதுக்கிக்கொண்டு, அதற்கமைய அலுவலகங்களுக்குச் செல்லுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த முன்பதிவு வசதியை கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், பத்தரமுல்லையில் அமைந்துள்ள திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த முன்கூட்டிய ஒன்லைன் பதிவு அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *