October 31, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ஆளுநர் திறந்து வைத்தார்

கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ஆளுநர் திறந்து வைத்தார்

​

நா.பவதாகர்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் பங்கேற்பில், கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (28) பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்துகொண்டார்.

கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ. அதம்பாவாவும், சிறப்பு அதிதிகளாகக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர். ஹசந்தி மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாடசாலை அதிபர் எஸ். தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்
பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *