பாறுக் ஷிஹான்
ஈகைத் திருநாளாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இயங்கிவரும் முஹம்மதிய்யா ஹிப்ழு மற்றும் குர்ஆன் பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழாவும் ‘அறிவுக் களஞ்சியம்’ போட்டியும் மிகச் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளையும், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் (சீறா) இளம் தலைமுறை மாணவர்களிடையே ஆழமாகப் பதிக்கும் நோக்கிலும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
முஹம்மதிய்யா ஹிப்ழு மற்றும் குர்ஆன் பிரிவில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கிடையேயான பல்வேறு போட்டி நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
நபி வழியைப் பின்பற்றுதல், இஸ்லாமிய வரலாறு, குர்ஆன் மனனத் திறன் மற்றும் வினாடி-வினா போட்டிகள் அடங்கிய ‘அறிவுக் களஞ்சியம்’ போட்டியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.விழாவின் சிறப்பம்சமாக நபிகளார்களின் புகழ் பாடும் மௌலித் பாராயணங்கள், நாஃ மற்றும் கஸீதாக்கள் என்பன மாணவர்களால் அழகிய முறையில் அரங்கேற்றப்பட்டன.
பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வழிகாட்டல் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பான நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊAரிலுள்ள பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் இதன்போது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






