October 31, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் நாவிதன்வெளி பிரதேச சபைக்குப் பாராட்டு சான்றிதழ் 

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் நாவிதன்வெளி பிரதேச சபைக்குப் பாராட்டு சான்றிதழ் 

( வி.ரி. சகாதேவராஜா)

தேசிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025/2026 இல் பங்கேற்ற நாவிதன்வெளி பிரதேச சபைக்கு பாராட்டு (Commendation) கிடைக்கப் பெற்றுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ஐ. ரூபசாந்தன் , செயலாளர் பா. சதீஸ்கரன் ஆகியோர் அப்பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

பொதுமக்களுக்குத் தரமான, வினைத்திறனான மற்றும் விளைதிறன் மிக்க சேவைகளை வழங்குதல், நிறுவனத்தின் நிர்வாகச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்துதல், கிடைக்கப்பெறும் வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் சேவை வழங்கும் செயற்பாடுகளில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள இந்தப் பாராட்டு, நாவிதன்வெளி பிரதேச சபையின் கூட்டு முயற்சிக்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்துள்ள  அங்கீகாரமாகும்.

தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025/2026 இல் நாவிதன்வெளி பிரதேச சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பாராட்டானது, நிறுவனத்தின் முன்னேற்றப் பயணத்தில் ஊக்கமளிக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ஐ. ரூபசாந்தன் , செயலாளர் பா. சதீஸ்கரன் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்கள், அலுவலகப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *