October 31, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (28) கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *