October 31, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை உவெஸ்லியிலும், விவேகானந்தாவிலும் இன்று கிழக்கு ஆளுநர் புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார்

கல்முனை உவெஸ்லியிலும், விவேகானந்தாவிலும் இன்று கிழக்கு ஆளுநர் புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார்

நா.பவதாகர்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் பங்கேற்பில், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும், விவேகானந்த தமிழ் வித்தியாலயத்திலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்கள் திறப்பு விழா இன்று (28) நடைபெறவுள்ளது.

கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அதம்பாவாவும், சிறப்பு அதிதிகளாகக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர். ஹசந்தி மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

உவெஸ்லியில் பி.ப 2.00 மணிக்கு அதிபர் கலையரசன் தலைமையிலும், விவேகானந்தாவில் பி.ப3.30 மணிக்கும் அதிபர் எஸ். தனராஜ் தலைமையிலும் நிகழ்வுகள் இடம்பெறும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *