பா.மேனன்
களுவாஞ்சிக்குடி கண்ணகிபுரம் விநாயகர் அறநெறிப் பாடசாலையில் சரஸ்வதி பூஜை நிகழ்வுகள் கடந்த 18.10.2026 அன்று மிகச் சிறப்பான முறையில் பக்திப் பெருக்குடன் நடத்தப்பட்டன.
இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையை அறநெறிப் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் இணைந்து வழங்கி மாணவர்களை மகிழ்வித்து மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.
விழாத் தொடக்கத்தில் கலைமகளின் பெருமையைப் போற்றும் “ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை” என்ற சரஸ்வதி துதிப்பாடல் உணர்வுபூர்வமாகப் பாடப்பட்டது.
இவ்விழாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பஜனைப் பாடல்களைப் பாடி, கலைமகள் வாணியின் திருவருளை வேண்டி மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.
அறநெறிப் பாடசாலையின் அதிபர் குணராசா டிலம்சன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு பக்தி பூர்வமாகவும் மங்களகரமாகவும் நிறைவுற்றது








