September 30, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் மாணவிக்கு மடிக்கணினி வழங்கி வைப்பு

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் மாணவிக்கு மடிக்கணினி வழங்கி வைப்பு

கல்வி முன்னேற்றத்திற்கான பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால், பாண்டிருப்பைச் சேர்ந்த தந்தையை இழந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு அவரது கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் மடிக்கணினி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.09.2026 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மாணவிக்கு மடிக்கணினியை வழங்கி வைத்தனர்.

மாணவியின் கல்வித் தேவையை கருத்திற்கொண்டு இந்த உதவியை வழங்குவதற்கு நிதிப் பங்களிப்பை மேற்கொண்ட அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. குலதீபன் அவர்களுக்கு, அமைப்பின் நிர்வாகிகள் தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

கல்வியில் முன்னேறுவதற்கு பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பதே தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *