( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச கர்ப்பிணி தாய்மாருக்கு சத்துள்ள உணவு உட்கொள்ள ஊக்குவிக்கும் செயற்பாடு, காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரதேச வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி மாவட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஷ் தலைமையில் இன்று (25) வெள்ளிக்கிழமையும் அவர்களுக்கான அந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது சுவாட் நிறுவனத்தினரால் கர்ப்பிணித்தாய்மாருக்கான சத்துள்ள வடை வழங்கப்பட்டது.
ANC clinic உடன் தொடர்புடையதாக நடைபெறும் சத்துணவு தொடர்பான அறிவூட்டல் கருத்தரங்கின்போது தொடர்ச்சியாக எமது தாய்மாருக்காக இயற்கையான சத்துணவுகளை வழங்கி அதன் நன்மைகள் பற்றி அறிவூட்டிவரும் இந்நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என வைத்திய அதிகாரி மருத்துவர் அஜந்தா தெரிவித்தார்.

