September 22, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நாளை பாண்டிருப்பில் வனவாசம்!

நாளை பாண்டிருப்பில் வனவாசம்!

( வி.ரி.சகாதேவராஜா)

600 வருடங்கள் பழமை வாய்ந்ததாகக் குறிப்பிடப்படும்  கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய உற்சவத்தின் வனவாசம் நிகழ்வு நாளை (23) புதன்கிழமை மாலை சம்பிரதாய பூர்வமாக நடைபெறவுள்ளது.

 பாரம்பரிய  தவநிலை நிகழ்வு நாளை மறுநாள் 24ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இடம்பெறும்.

 மறுநாள் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீமிதிப்பு பிரதான சடங்கு இடம்பெறும்.

இறுதியாக 26ஆம் திகதி சனிக்கிழமை பாற்பள்ளயம்  நிகழ்வு இடம்பெறும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *