September 22, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – மன்னிப்பு பெற்றுக்கொடுக்க இராஜதந்திர முயற்சிகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – மன்னிப்பு பெற்றுக்கொடுக்க இராஜதந்திர முயற்சிகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் பெற்றோரை ஜனாதிபதி இன்று (21) சந்தித்துள்ளார்.

இதன்போது, அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தேவையான தலையீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னரிடம் இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக இதுவரை அதிகாரபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அனோஜனின் பெற்றோருக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

மேலும், அனோஜன் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *