September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பில் வழக்கு – அர்ச்சுனா எம்.பி. உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் தொடர்பான சர்ச்சையை அடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் சுகுணன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு […]

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட எட்டு தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில், நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 15 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 9 பிரதிவாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்ற நீதிபதி (தலைவர்) நவரத்ன மாரசிங்க, […]

Read More

அனோஜன் விவகாரத்தில் யாரும் விளையாட வேண்டாம் – எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசி உரையாடலை பகிரங்கப்படுத்தியது தவறானது

அனோஜன் விவகாரத்தில் யாரும் அவசரப்பட்டு செயற்படாமல், மிகவும் பொறுப்புடனும் நிதானமாகவும் அணுக வேண்டும். குறிப்பாக, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவரின் மனநிலையையும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் முதலில் புரிந்துகொள்வது அவசியமாகும். சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இராஜதந்திர ரீதியிலான கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்கள் ஊடாக அவரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். அதேவேளை, இந்த விவகாரத்தை […]

Read More

நாளை பாண்டிருப்பில் வனவாசம்!

( வி.ரி.சகாதேவராஜா) 600 வருடங்கள் பழமை வாய்ந்ததாகக் குறிப்பிடப்படும்  கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய உற்சவத்தின் வனவாசம் நிகழ்வு நாளை (23) புதன்கிழமை மாலை சம்பிரதாய பூர்வமாக நடைபெறவுள்ளது.  பாரம்பரிய  தவநிலை நிகழ்வு நாளை மறுநாள் 24ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இடம்பெறும்.  மறுநாள் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீமிதிப்பு பிரதான சடங்கு இடம்பெறும். இறுதியாக 26ஆம் திகதி சனிக்கிழமை பாற்பள்ளயம்  நிகழ்வு இடம்பெறும்

Read More

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் ;மாணவர் பாராளுமன்றம்

செல்லையா பேரின்பராசா ஜனனாயகப் பண்புகளை மாணவர் மனங்களில் விதைப்பதற்காகவும், தலைமைத்துவப் பண்புகளை மாணவர்களிடம் வளர்ப்பதற்காகவும் பாடசாலைகளில் மாணவர் பாராளுமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன இதன் மூலமாக இன்றைய சிறார்களை நாளைய தலைவர்களாக சிறந்த முறையில் உருவாக்க முடியும். இவ்வாறு பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ரகுகரன் குறிப்பிட்டார். பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றம் இப் பாடசாலை அதிபர் சா.கிருபைராசாவின் வழிகாட்டலிலும் பிரதி அதிபர் இ.லிங்கநாதனின் தலைமையிலும் (22.09.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது. […]

Read More

கதிர்காம யாத்திரை நாயைத் தாக்கிய இளைஞனுக்கு 100 ரூபா அபராதம்: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு- 3 மாதச் சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பு

பாறுக் ஷிஹான கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு 100 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து, கல்முனை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், 2026 ஜூன் 28 ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, சந்தேகநபர் 50,000 ரூபாய் […]

Read More

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்; நாடாளுமன்றில் அடுத்த நகர்வு தொடர்பில் விபரித்த அமைச்சர்

அனோஜனுக்கு மரண தண்டனை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அனோஜனின் சார்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அனோஜனை சவூதி அரேபியாவின் இணையக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்குப் பதிலாக, ஷரீஆ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குமாறு […]

Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாடுமீன்கள் – மட்டக்களப்பின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அழகிய சின்னம்

மட்டக்களப்பின் தனித்துவமான கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கானமிசைக்கும் பாடுமீன்களை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் அழகிய வடிவில் சின்னமாக அமைத்து நிலைநிறுத்தியிருப்பது பாராட்டுக்குரிய முயற்சியாக அமைந்துள்ளது. மட்டக்களப்பின் கலாசாரத்தையும் வாழ்வியலையும் மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்யும் வகையில், பாடுமீன்களின் சிறப்பை பிரதிபலிக்கும் இந்தப் பௌதீகச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அடையாளமாகவும், மட்டக்களப்பின் வரலாற்று மற்றும் கலாசாரப் பெருமையை வெளிப்படுத்தும் சின்னமாகவும் இது அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னத்தை வைத்தியசாலை வளாகத்தில் […]

Read More

அனோஜனின் குடும்பத்திற்குப் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் நேரில் ஆறுதல்!

கொழுப்பில் நாளை கவனயீர்ப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவிப்பு சவூதி தூதரகத்தில் மகஜர் கையளிக்க அனோஜனின் குடும்பத்தினரும் கொழும்பு செல்லச் சம்மதம்  (பாறுக் ஷிஹான்) சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும் தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (22) நேரில் விஜயம் செய்து குடும்பத்தினருக்குத் தமது ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர். கல்முனை, நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜனின் இல்லத்திற்குச் சென்ற அக் குழுவினர், […]

Read More

சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22.09.2026) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக […]

Read More