September 22, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை

சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22.09.2026) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *