மட்டக்களப்பின் தனித்துவமான கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கானமிசைக்கும் பாடுமீன்களை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் அழகிய வடிவில் சின்னமாக அமைத்து நிலைநிறுத்தியிருப்பது பாராட்டுக்குரிய முயற்சியாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பின் கலாசாரத்தையும் வாழ்வியலையும் மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்யும் வகையில், பாடுமீன்களின் சிறப்பை பிரதிபலிக்கும் இந்தப் பௌதீகச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அடையாளமாகவும், மட்டக்களப்பின் வரலாற்று மற்றும் கலாசாரப் பெருமையை வெளிப்படுத்தும் சின்னமாகவும் இது அமைந்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னத்தை வைத்தியசாலை வளாகத்தில் உருவாக்கி நிலைநிறுத்தியமைக்காக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் மற்றும் பணிக்குழுவினருக்கும், இந்த அழகிய வரலாற்றுச் சின்னத்தை வடிவமைத்த குழுவினருக்கும் எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மட்டக்களப்பின் தனித்துவத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் இத்தகைய முயற்சிகள் மேலும் தொடர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.