September 15, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்; நேற்று பட்டிருப்புத் தொகுதிவாழ் மக்களின் உபயம்

துறைநீலாவணை நிருபர் பேரின்பராசா அம்பாறை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 04.09.2026 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.  இவ் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 09.09.2026 ஆந் திகதி பட்டிருப்புத் தொகுதிவாழ் மக்களை உபயகாரர்களாகக் கொண்டு வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ் விழாவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இவ் அலுவலகத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு […]

Read More

அக்கரைப்பற்று, தீவுக்காலை பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற கிராமத்துக்கு மகுடம்” நிகழ்வு!

– கிரிசாந் மகாதேவன் – அக்கரைப்பற்று, கோளாவில் தீவுக்காலை பிரதேசத்தில் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை வாழ்த்தி கௌரவிக்கும் “கிராமத்துக்கு மகுடம்” (Crown of the Village) பாராட்டு விழா அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவானது தீவுக்காலை அருள்மிகு தில்லையாற்றுப் பிள்ளையார் தேவஸ்தான வளாகத்தில் இடம்பெற்றது. கிராமத்தின் எதிர்காலத் தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சிறந்த […]

Read More

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸில்தரம் 05 பரீட்சை நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி!

க.டினேஸ் சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய 25 மாணவர்களில் 21 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றுள்ளதுடன்04 மாணவர்கள் புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026/09/09 அன்று பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Read More

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக கல்முனை பிராந்திய இணையம் கனடா: பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு நிதி உதவி!

​கல்முனை பிராந்திய இணையம் கனடா எனும் அமைப்பினால், பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான போட்டோகாப்பி இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது. ​இன்றைய தினம் (10/09/2026) நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் செயற்பாட்டாளர், பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ​மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். […]

Read More

கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சனிக்கிழமை

செல்லையா பேரின்பராசாதுறைநீலாவணை கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் 12.09.2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சிரேஷ்ட எழுத்தாளர் தமிழ்மணி உமா வரதராஜன் தலைமையில்கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கோ. தனபாலசுந்தரம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம் எஸ் […]

Read More

ஞாயிறன்று அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய குடமுழுக்கு

. (செல்வி வினாயகமூர்த்தி) கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி குடமுழுக்கு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட. ஆலயப் புனருத்தாரணப் பணிகளின் நிறைவாக, ஆகம முறைப்படி பல்வேறு விசேட கிரியைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படிவரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு மேல் காரியசித்தி கணபதி ஆராதனை கிரியைகள் ஆம்பமாவதுடன் குலதெய்வ விஸ்வகர்மா ஆராதனை,கணபதி […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு – 2026 சௌவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. எம். ஜீவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செல்வ விநாயகர் அறநெறிப் பாடசாலை, பாலமுருகன் அறநெறிப் பாடசாலை […]

Read More

Zee தமிழில் மகா நடிகையாக பிரகாசித்த காரைதீவு இரைசையா நிவேதிகா; வெளிவரவுள்ள திரைப்படத்திலும் கதாநாயகி

இந்தியாவில் வெற்றிக்கொடி நாட்டிய சீ தமிழ்  மகாநடிகை காரைதீவு  நிவேதிகா இலங்கை வருகை!  வவுனியாவில் சனியன்று  கௌரவிப்பு! ( வி.ரி. சகாதேவராஜா)  இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியின் “மகாநடிகை” போட்டி நிகழ்வில் இலங்கையின் கிழக்கு காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா இரண்டாம் றன்னஸ்அப் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார். இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழ் மணக்கும் மண்ணாம் யாழ்நூல் தந்த விபுலானந்த அடிகளார் எனும் உலகப் புகழ் பூத்த புலவர் அவதரித்த காரைதீவு மண்ணைச் […]

Read More

இலங்கை – இந்தியா இடையே 3 முக்கிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை மற்றும் இந்தியா இடையே வான் பாதுகாப்புத் திறன், இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் பரிமாற்றம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன. கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கையெழுத்தான 3 ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்கள் முக்கிய விடயங்கள்

Read More

சாய்ந்தமருதில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை அமைத்தலும் சமகால அரசியல் தெளிவூட்டல் நிகழ்வும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை அமைத்தலும் சமகால அரசியல் தெளிவூட்டல் நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம் முன்பாக 19ஆம் வட்டார தலைவர் எம்.ஐ. நஜீம் தலைமையில் (07) இடம்பெற்றது. இந் நிகழ்வில்,  கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இக்கருத்தரங்கில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் 19ஆம் வட்டாரத்தில் […]

Read More