September 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக கல்முனை பிராந்திய இணையம் கனடா: பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு நிதி உதவி!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக கல்முனை பிராந்திய இணையம் கனடா: பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு நிதி உதவி!


​கல்முனை பிராந்திய இணையம் கனடா எனும் அமைப்பினால், பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான போட்டோகாப்பி இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.


​இன்றைய தினம் (10/09/2026) நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் செயற்பாட்டாளர், பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


​மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் இந்த நிதியுதவி, பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் கல்விப் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


​ கல்முனை பிராந்திய இணையம் கனடா மற்றும் பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகள்.
​மேலதிக தகவல்:
​கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு, கல்முனை பிராந்தியத்தில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *