September 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சனிக்கிழமை

கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சனிக்கிழமை

செல்லையா பேரின்பராசா
துறைநீலாவணை

கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் 12.09.2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சிரேஷ்ட எழுத்தாளர் தமிழ்மணி உமா வரதராஜன் தலைமையில்
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கோ. தனபாலசுந்தரம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம் எஸ் சஹீதுல் நஜீம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் க. லிங்கேஸ்வரன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, டாக்டர். நடராசா ரமேஷ், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் செல்லத்தம்பி கலையரசன் ஆகியோர் கலந்து கொள்வர்.

இவ் விழாவில் இந் நூல் பற்றிய மதிப்புரைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் சி. ஜெயசங்கர்,
சிரேஷ்ட கவிஞர் சோலைக்கிளி, டாக்டர். புஷ்பலதா லோகநாதன் (கவிதாயினி மலரா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு நிலை பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

இந் நூல் பற்றிய அறிமுகவுரையை தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தவுள்ளார்.

கிழக்கின் இலக்கியச் சூழலில் கவிஞர் எழுத்தாளர் சிவ வரதராஜனின் புதிய படைப்பாக வெளிவரும் இந்நூல், கடந்த கால நினைவுகள், வாழ்வனுபவங்கள் மற்றும் காலத்தின் தடங்களை இலக்கியப் பார்வையில் பதிவு செய்யும் படைப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *